திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாரதிய ஜனதா கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவரும் திருச்சி சிவாவின் மகனுமாகிய சூர்யாவின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அலுவலகத்தை முற்றுகையிட பாரதிய ஜனதா கட்சியினர் பேரணியாகச் சென்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பாரதிய ஜனதா கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM