பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் தற்போது எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறி வருகின்றனர்.
ஆனால் திடீர் திடீரென எலக்ட்ரிக் வாகனங்கள் தீப்பிடித்து வருவதால் இந்த வாகனங்களின் விற்பனை சரிந்தது என்று சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவின
ஆனால் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஓலா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த 2 மாதங்களில் ரூபாய் 500 கோடி வருமானம் பெற்று உள்ளதாக அறிவித்துள்ளது.
கலையலங்காரா.. எல்லாத்தையும் மாத்துங்கடா.. வர்த்தகத்தை மூடிய ஓலா..!
ஓலா ஸ்கூட்டர்
ஓலா நிறுவனம் தயாரித்த ஓலா பேட்டரி ஸ்கூட்டர் அப்போது திடீர் திடீரென தீப்பிடித்து வருவதாக செய்திகள் வெளியாகின. தமிழகத்திலும் சென்னை உள்பட ஒருசில இடங்களில் ஓலா பேட்டரி ஸ்கூட்டர்கள் தீப்பிடித்ததாக கூறப்பட்டது.
விற்பனை
இதனால் ஓலா ஸ்கூட்டர்கள் வாங்குவதற்கு பொதுமக்கள் தயங்கி வருவதாகவும், இந்நிறுவனத்தின் ஸ்கூட்டர் விற்பனை மிகப்பெரிய அளவில் சரிந்து உள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் இந்த தகவல் முற்றிலும் தவறு என்பது ஓலா நிறுவனத்தின் வருவாய் அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.
ரூ.500 கோடி
இந்த் ஆண்டு ஏப்ரல், மே ஆகிய இரண்டு மாதங்களில் மட்டும் ஓலா பேட்டரி ஸ்கூட்டர் வருவாய் ரூபாய் 500 கோடியை கடந்து விட்டது என ஓலா நிறுவனம் வெளியிட்டுள்ள வருவாய் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிதியாண்டில் ஓலா நிறுவனத்தின் வருவாய் 100 கோடி டாலரை அதாவது ரூ.7,800 கோடியை கடந்து விடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
நம்பிக்கை
ஒலா நிறுவனத்தின் பேட்டரி ஸ்கூட்டர் ஆங்காங்கே தீப்பிடித்து வந்தாலும், அதில் வாடிக்கையாளர்களின் தவறு தான் அதிகமாக உள்ளது என்றும் ஓலா நிறுவனத்தின் ஸ்கூட்டர் தவறு இல்லை என்ற பொதுவான கருத்து நிலவி வருகிறது. வாடிக்கையாளர்களின் இந்த நம்பிக்கை காரணமாக ஓலா பேட்டரி ஸ்கூட்டர்கள் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தினசரி 1000 ஸ்கூட்டர்கள்
இந்த நிலையில் கிருஷ்ணகிரியில் செயல்படும் ஓலா நிறுவனத்தின் தொழிற்சாலையில் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டு இருப்பதாகவும் அங்கு தினசரி 1000 ஸ்கூட்டர்கள் உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது.
குவியும் ஆர்டர்
ஓலா நிறுவனத்திற்கு ஏராளமான ஆர்டர்கள் குவிந்து வருவதால் அதற்கேற்றார்போல் உற்பத்தியை அதிகரிக்கும் திட்டங்களும் நடைபெற்று வருகின்றன என்ற நிறுவனத்தின் நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.
விலை எவ்வளவு?
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் ஓலா நிறுவனம் பேட்டரி ஸ்கூட்டருக்கான ஆர்டர்களை எடுத்து வரும் நிலையில் ஆர்டர்கள் ஒவ்வொரு மாதமும் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஓலா நிறுவனத்தின் எஸ்1 ஸ்கூட்டரின் விலை ரூபாய் 99,999 என்றும், எஸ்1 ப்ரோ ஸ்கூட்டரின் விலை ரூ.1,29,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Ola Electric crosses Rs.500 crore revenue in last two months
Ola Electric crosses Rs.500 crore revenue in last two months | அப்பப்ப தீப்பிடித்தாலும் விற்பனைக்கு குறைவில்லை…. ஓலாவின் வருவாய் இத்தனை கோடியா?