இந்திய ரிசர்வ் வங்கியின் சமீபத்திய 50 புள்ளிகள் ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியது என்பதும் இதனால் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
ரெப்போ வட்டி விகிதம் உயர்வு காரணமாக வீட்டுக் கடன், பர்சனல் கடன் உள்பட பல்வேறு கடன்களுக்கான வட்டி விகிதம் உயர்ந்தது என்பதால் கடன் வாங்கியவர்களின் பாடு திண்டாட்டமாக இருந்தது.
ஆனால் அதே நேரத்தில் ரெப்போ வட்டி விகிதம் உயர்வு காரணமாக பிக்சட் டெபாசிட் உள்ளிட்ட சேமிப்பு வகைகளுக்கு வட்டி விகிதம் உயர்ந்து என்பதையும் பார்த்தோம்.
2022ல் மட்டும் 8,000 கோடீஸ்வரர்களை இழக்கின்றதா இந்தியா? என்ன காரணம்?
வட்டி விகிதம் உயர்வு
இந்த நிலையில் ரெப்போ வட்டி விகித உயர்வு காரணமாக ஸ்டேட் பாங்க், ஐசிஐசிஐ வங்கி, கோடக் மகேந்திரா வங்கி உள்பட பல்வேறு வங்கிகள் தங்கள் வங்கியில் பிக்சட் டெபாசிட் செய்பவர்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியது என்பதை பார்த்தோம்.
பேங்க் ஆப் இந்தியா
அந்த வகையில் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பாங்க் ஆப் இந்தியாவும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு பிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இதுகுறித்து பாங்க் ஆப் இந்தியாவின் இணையதளத்தில் வெளியான தகவலின்படி பிக்சட் டெபாசிட் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு புதிய வட்டி விகிதம் குறித்த விபரங்கள் இதோ:
புதிய வட்டி விகிதங்கள்
- 7-14 நாட்கள்: 2.85 % சீனியர் சிட்டிசகளுக்கு 3.35 %
- 15-30 நாட்கள்: 2.85% சீனியர் சிட்டிசகளுக்கு 3.35 %
- 31-45 நாட்கள்: 2.85% சீனியர் சிட்டிசகளுக்கு 3.35 %
- 46-60 நாட்கள்: 3.85% சீனியர் சிட்டிசகளுக்கு 4.35%
- 61-90 நாட்கள்: 3.85% சீனியர் சிட்டிசகளுக்கு 4.35%
- 91-179 நாட்கள்: 3.85% சீனியர் சிட்டிசகளுக்கு 4.35%
- 180-269 நாட்கள்: 4.35% சீனியர் சிட்டிசகளுக்கு 4.85%
- 270-1 வருடம்: 4.35% சீனியர் சிட்டிசகளுக்கு 4.85%
ஒரு வருடத்திற்கு மேல்
- 1 வருடம் – 443 நாட்கள்: 5.30% சீனியர் சிட்டிசகளுக்கு 5.80%
- 445 நாட்கள் -2 வருடம்: 5.40% சீனியர் சிட்டிசகளுக்கு 5.90%
- 2- 3 வருடங்கள்: 5.40% சீனியர் சிட்டிசகளுக்கு 5.90%
- 3-5 வருடங்கள்: 5.35 % சீனியர் சிட்டிசகளுக்கு 5.85%
- 3-5 வருடங்கள்: 5.35 % சீனியர் சிட்டிசகளுக்கு 5.85%
- 5-8 வருடங்கள்: 5.35 % சீனியர் சிட்டிசகளுக்கு 5.85%
- 8-10 வருடங்கள்: 5.35 % சீனியர் சிட்டிசகளுக்கு 5.85%
வாடிக்கையாளர்கள்
பேங்க் ஆப் இந்தியாவின் மேற்கண்ட புதிய வட்டி விகிதத்தை பயன்படுத்திக்கொண்டு வாடிக்கையாளர்கள் புதிதாக முதலீடு செய்யலாம் என அறிவுறுத்தப்படுகிறது.
Bank of India modifies fixed deposits interest rates: Check New Rates Here
Bank of India modifies fixed deposits interest rates: Check New Rates Here | நீங்கள் பேங்க் ஆப் இந்தியா வாடிக்கையாளரா? இதோ உங்களுக்கு ஒரு சூப்பர் செய்தி!