பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த 9ம் வகுப்பு மாணவன் சடலமாக மீட்பு.. ஆரணி அருகே சோகம்!

ஆரணி அருகே நேற்று முன்தினம் காணமல் போன 9 ம் வகுப்பு மாணவன் இன்று கிணற்றில் சடலமாக மீட்பு.
ஆரணி அடுத்த கண்ணமங்கலம் பகுதியைச் சேர்ந்த மாலிக் பாட்சா என்பவரின் மகன்கள் முகமது அலி, முகமது ஆசிப். இளைய மகன் முகம்மது ஆசிப் கண்ணமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளான்.
நேற்று முன்தினம் வியாழக்கிழமை மதியம் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த முகமது ஆசிப், வீட்டிலிருந்து சைக்கிளை எடுத்துக்கொண்டு வெளியே சென்றிருக்கிறான். ஆனால் நேற்று வெளியே சென்ற அந்த மாணவன் இன்று வரை வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து முகமது ஆசிப்பின் தந்தை மாலிக் பாட்சா நேற்று கண்ணமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில் இன்று கண்ணமங்கலம் அருகே உள்ள நாகநதி ஆற்றின் கரையோரம் உள்ள கிணற்றிலுள்ள தண்ணிரில் மாணவரின் சடலம் ஒன்று மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
image
தகவலறிந்து சென்ற கண்ணமங்கலம் போலீசார் கிணற்றில் மிதந்த நிலையில் இருந்த சடலத்தை கயிறு கட்டி மீட்டு மேலே எடுத்து பார்த்ததில் காணாமல் போன முகமது ஆசிப் என தெரிய வந்துள்ளது.
மேலும் கிணற்றின் கரையில் மேல் மாணவன் கொண்டு சென்ற சைக்கிள் மற்றும் பள்ளி சீருடை கிணற்றின் கரையோரம் இருந்ததை கண்டு இறந்தது முகமது ஆசிப் தான் என உறுதிப்படுத்தி முகமது ஆசிப் பின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர் மாணவனின் சடலத்தை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவன் சடலமாக கிணற்றில் மிதந்ததால் மாணவன் இறப்பு குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ALSO READ: 
போடி: அதிமுக அலுவலகத்தில் இருந்து அகற்றப்பட்ட இபிஎஸ் படம்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.