பிரதமருக்கு எதிராக குற்றம்சாட்டியவர்கள், மனசாட்சி இருந்தால் மன்னிப்பு கேட்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
குஜராத் கலவர வழக்கிலிருந்து பிரதமர் மோடிக்கு தொடர்பில்லை என உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்த நிலையில் ஏஎன்ஐ நிறுவனத்துக்கு அமித் ஷா பேட்டி அளித்தார்.
அப்போது, சில அரசுசாரா நிறுவனங்களும், அரசியல் உள்நோக்கம் கொண்ட சில பத்திரிகையாளர்களும் குஜராத் கலவரம் தொடர்பாக பாஜக மீது தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்தன என்றார்.
சிறப்பு புலனாய்வு குழு முன்பு நரேந்திர மோடி ஆஜரானபோது, அவருக்கு ஆதரவாக யாரும் போராட்டம் நடத்தவில்லை என்ற அமித் ஷா, 19 ஆண்டுகளாக மிகுந்த வலியுடன் போராடி பிரதமர் வெற்றி பெற்றுள்ளார் என்றார்.