டெல்லி: பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு யஷ்வந்த் சின்ஹா ஆதரவு தருமாறு கேட்டுக் கொண்டார். ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் ஒன்றிய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா நிறுத்தப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்ட சின்ஹா, கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.