டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஓ.பன்னீர்செல்வம் என்ன பேசினார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான பாஜக வேட்பாளர் திரௌபதி முர்மு தனது வேட்பு மனுவை நேற்று தாக்கல் செய்தார் இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர். ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத் குமார், சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன்., முன்னாள் மக்களவை உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் ஆகியோரும் உடன் இருந்தனர்.
இந்நிலையில், வேட்புமனு தாக்கலின்போது பிரதமர் நரேந்திர மோடி ஓ.பன்னீர்செல்வத்துடன் பேசி இருக்கிறார். ஓ.பன்னீர்செல்வத்தை பார்த்து, “நீங்கள் நலமாக இருக்கிறீர்களா?” என மோடி கேட்டிருக்கிறார். அதற்கு பன்னீர் செல்வம், நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். பின்னர் மோடி அவரிடம், தங்களின் வருகைக்கும், ஒத்துழைப்புக்கும் மிக்க நன்றி எனக் கூறியுள்ளார். தமிழகத்தில் அதிமுக தலைமைக்கான பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து வரும் சூழலில், இந்த சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM