பிரித்தானியாவில் இருந்து இரண்டு கொள்கலன்களில் நாட்டிற்கு கடத்தப்பட்ட ஐந்து சொகுசு கார்கள், ஒருதொகை வெளிநாட்டு மதுபானம் மற்றும் ஒருதொகை மசகு எண்ணெய் ஆகியவற்றை இலங்கை சுங்கப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.
இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட கார்கள் உள்ளிட்ட பொருட்களின் பெறுமதி 150 மில்லியனுக்கும் அதிகமாகும் என்று இலங்கை சுங்க ஊடகப் பேச்சாளரும் பிரதி சுங்கப் பணிப்பாளருமான சுதத்த சில்வா தெரிவித்துள்ளார்.
சுங்கப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது, மற்றொரு கொள்கலனில் இரண்டு பென்ஸ் கார்கள், ஒரு BMW கார் மற்றும் ஃபியட் வகையிவாய கார் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணைகளின் பின்னர் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, பொருட்களை இறக்குமதி செய்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் சுங்கப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.