திருமணம் என்றாலே இன்றைய காலகட்டத்தில் ஒரு திருவிழா போல நடத்துகின்றனர். அந்த விழாவில் பல விதங்களில் பல கலாட்டாக்கள் நடக்கின்றன.
முன்பெல்லாம் திருமணம் என்றால் மிக முக்கியமான விழாவாக பார்க்கப்பட்டது. ஆனால் இன்று அப்படி இல்லை செம ஜாலியாக நண்பர்களுடன் ஆட்டம் போடுவடும் பேஷனாகி விட்டத்து. சில இடங்களில் மணமகளும், மணமகனுமே ஆட்டம் போடுவதை சமூக வலைதளங்களில் பார்க்க முடிகிறது. மொத்தத்தில் இது மறக்க முடியாத அனுபவங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இதுவே அவர்களது திருமண விழாவில் மறக்க முடியாத சம்பவமாக இருக்கிறது.
ஒரே ஒரு தவறான தகவல்.. சாம்சங் நிறுவனத்திற்கு ரூ.76 கோடி அபராதம்..!
புல்டோசரில் ஊர்வலமா?
ஆனால் மத்திய பிரதேசத்தில் நடந்த ஒரு சம்பவம் அந்த மாப்பிள்ளைக்கு காலம் முழுவதும் மறக்க முடியாத சம்பவமாக மாறியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பீடல் என்ற மாவட்டத்தில், ஜல்லார் கிராமத்தில் உள்ள அங்குஷ் ஜெய்ஸ்வால் என்ற சிவில் இன்ஜினியருக்கு சமீபத்தில் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. பொதுவாக மணமகன் ஊர்வலமாக வரும்போது காரில் வருவார். அல்லது குதிரை மீது அமர்ந்து செல்வார்கள். ஆனால் மணமகன் சிவில் இன்ஜினியர் அல்லவா? அவரின் துறைக்கு ஏற்ப புல்டோசரில் ஊர்வலம் செல்ல நினைத்துள்ளார்.
ரூ.5000 அபராதம்
அதனையே செயல்படுத்தியும் உள்ளார். மாப்பிள்ளை அவரது குடும்பத்தினை சேர்ந்த இரு பெண்கள் என அந்த புல்டோசரில் அமர்ந்து வந்துள்ளனர். அந்த புல்டோசரை ரவி பராஸ்கர் என்பவர் இயக்கியும் வந்துள்ளார்.
புல்டோசர்கள் வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் ஒரு வாகனம் என்பதால், அதில் மக்களை ஏற்றி செல்லகூடாது என்ற நிலையில், மோட்டார் வாகன சட்டத்தின் 39/192(1) படி, ரவிக்கு 5,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
மணமகன் கருத்து?
அங்குஷ் ஜெயிஸ்வால் கட்டமைப்பு நிறுவனத்தின் பணிபுரிந்து வருகின்றேன். எனது வாழ்க்கையில் கட்டிடம் சார்ந்த மெஷின்கள், அதாவது புல்டோஷர் உள்பட பலவும் எனது வேலையில் உள்ளன. ஆக இதன் மூலம் எனது திருமணத்தினை மறக்க முடியா நிகழ்வாக மாற்ற நினைத்தேன்.
மறக்க முடியா சம்பவம்?
எனது திருமண நிகழ்வை வித்தியாசமாக நடத்த விரும்பியே புல்டோசரில் ஊர்வலம் வந்தேன். ஆனால் காவல் துறையின் நடவடிக்கையினை என்னால் எப்போதும் மறக்க முடியாத ஒன்றாக மாற்றிவிட்டது. இதுவும் எனது திருமண விழாவில் மறக்க முடியாத சம்பவம் தான் என நகைச்சுவையாக பதிலளித்துள்ளார்.
viral news! MP driver booked fined for using bulldozer in marriage procession
Ankush Jaiswal, a civil engineer from Madhya Pradesh, who wanted to make his wedding different, has gone to the groom’s procession in Bulldozer. But he was fined Rs 5,000 by the police under the Motor Vehicle Act.