மதுரை: மதுரையில் பேமசான பிரபல பன் புரோட்டா கடைக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். சுகாதாரமற்ற வகையில் உணவு தயாரித்ததாக கூறி சில் வைக்கப்பட்டு உள்ளது.
தூங்கா நகரமான மதுரை மல்லிக்கு பெயர்பெற்றது. அதுபோல மதுரைகறிதோசையும் பெயர் பெற்றது. சமீப ஆண்டுகளாக மதுரையில் உள்ள ஒரு பிரபல ஓட்டலில் போடப்படும் பன் புரோட்டா மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இக்கடை மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது வெளிஊர்களுக்கு செல்பவர்களும், சுற்றுலா பயணிகளும், மதுரையின் பன்புரோடாவை தேடிச்சென்று உண்டு மகிழ்ந்தனர்.
இந்த கடையானது, மதுரை மாநகரில் சாத்தமங்கலம் ஆவின் சந்திப்பில் அமைந்துள்ளது. இந் கடையானது, சாலையை ஆக்கிரமித்து பெரிய உணவகமாக கட்டியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. மேலும் இந்த கடையில் உணவு தயாரிக்கப்படும் இடமாறது சுகாதரமற்று இருப்பதாகவும் புகார்கள் எழுந்தது.
இதையடுத்து, அங்கு சென்று ஆய்வு செய்த உணவு பாதுகாப்பு குழுவினர், அங்கு தரமற்ற முறையில் புரோட்டா தாயார் செய்து விற்பனை செய்து வருகை கண்டறிந்தனர். இதையடுத்து, அந்த கடைக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடைக்கு சீல் வைத்தனர்.
மதுரையில் பிரபலமான பன் புரோட்டா கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.