மரம் விழுந்து பெண் உயிரிழந்த விவகாரம்.. விபத்துக்கும் மழைநீர் வடிகால் பணிகளுக்கும் தொடர்பில்லை – மேயர் பிரியா!

சென்னை கே.கே.நகரில் மரம் விழுந்து ஏற்பட்ட விபத்து இயற்கையானது என்றும் மழைநீர் வடிகால் பணிகளுக்கும் விபத்திற்கும் தொடர்பில்லை என்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை கே.கே.நகரில் மரம் சாய்ந்து காரின் மீது விழுந்ததில், காரில் பயணித்த பெண் வங்கி மேலாளர் உயிரிழந்தார்.

மழைநீர் வடிகால் பணிகளால் இந்த விபத்து நேர்ந்ததாக கூறப்பட்ட நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் தூய்மை பணி மற்றும் விழிப்புணர்வு முகாமை துவக்கி வைத்த பின் செய்தியாளார்களுக்கு பேட்டியளித்த மேயர் பிரியா, இதனை தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.