உத்தர பிரதேசத்தின் ஆக்ராவில் முகநூல் காதலனுடன் தனியாக வசித்துவந்த இன்ஸ்டாகிராம் மாடல் நடிகையை அவரது முன்னாள் கணவர், 4வது மாடியில் இருந்து தூக்கி எறிந்து கொலை செய்தார்.
கடந்த 2017ம் ஆண்டு தனது கணவர் ஆகாஷ் கவுதமை விவாகரத்து செய்த பின்னர், முகநூல் மூலம் அறிமுகமான விபுலுடன் சேர்ந்து மாடல் நடிகை ரித்விகா சிங் வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில், அவரது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த முன்னாள் கணவர் ஆகாஷ், ரித்விகாவின் கைகளை கயிற்றால் கட்டி பால்கனியில் இருந்து தூக்கி வீசி கொலை செய்த சிசிடிவி வெளியாகியுள்ளது.