பிரபல பின்னணி பாடகி மஞ்சரி தனது பள்ளித்தோழரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
மலையாள திரையுலகில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வருபவர் மஞ்சரி.
கிட்டத்தட்ட 500 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். கடந்த 2005-ல் மலையாளத்தில் இளையராஜா இசையமைத்த அச்சுவின்டே அம்மா என்கிற படத்தில் பாடகியாக அறிமுகமானவர்.
இந்த நிலையில் இவர் தனது பள்ளிக்கால தோழன் ஜெரின் என்பவரை தற்போது திருமணம் செய்துள்ளார். இவர்கள் இருவரும் மஸ்கட்டில் பள்ளியில் படித்த காலத்திலிருந்து நெருங்கிய நண்பர்களாக இருந்து வருபவர்கள்.
அதேசமயம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மஞ்சரிக்கு ஏற்கனவே திருமணம் நடைபெற்று பின்னர் முதல் கணவரிடம் இருந்து விவாகரத்தும் பெற்று விட்டார்.
இந்த நிலையில்தான் தனது நெருங்கிய நண்பரை திருமணம் செய்து கொண்டுள்ளார் மஞ்சரி.
இந்த திருமணத்தில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.