மூழ்கிய வெளிநாட்டு கப்பல்: எண்ணெய் கசிவு கண்காணிப்பு| Dinamalar

மங்களூரு : உல்லாளில் மூழ்கிய கப்பலிலிருந்து எண்ணெய் கசிவு ஏற்படுகிறதா என்பதை, கடலோர காவல் படையினர் ஆறு படகிலும், இரண்டு ஹெலிகாப்டரிலும் கண்காணித்து வருகின்றனர்.ஓமனிலிருந்து எகிப்துக்கு 80 ஆயிரம் கிலோ இரும்பு கம்பிகளை சுமந்த கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில், 15 பேர் இருந்தனர்.

இக்கப்பல், ஜூன் 21ல் தட்சிண கன்னடா உல்லாளின் உச்சில சோமேஸ்வரா அருகில் செல்லும்போது, தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு நின்றது. நடுக்கலில் சிக்கியவர்களை, கடலோர பாதுகாப்பு படையினர் மீட்டனர்.இந்நிலையில், நேற்று இக்கப்பல் மூழ்கியது. இதையடுத்து, கடலோர காவல் படையினர், ஆறு ரோந்து படகிலும், இரண்டு ஹெலிகாப்டரிலும், கடலில் மாசு ஏற்பட்டுள்ளதா என கண்காணித்து வருகின்றனர்.இது தொடர்பாக, மாநில சுற்றுச்சூழல் கட்டுப்பாடு ஆணையம், நியூ மங்களூரு துறைமுகம், மங்களூரு சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ ரசாயன நிறுவனத்தினரும் கண்காணிக்கின்றனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.