ரஷ்யாவிடம் இருந்து இலங்கை குறைந்த விலைக்கு எரிபொருளை கொள்வனவு செய்தால், இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் ராஜதந்திர தொடர்புகள் சீர்குலையும் என்ற கருத்து முற்றிலும் பொய்யானது என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
எம்பிலிப்பிட்டியவில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
எரிபொருள் பிரச்சினைக்கு துரிதமாக தீர்வு காண வேண்டும்
ராஜதந்திர மட்டத்தில் தலையீட்டு எரிபொருள் பிரச்சினைக்கு துரிதமாக தீர்வு காண வேண்டும். இலங்கைக்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக ரஷ்யாவிடம் விடுக்கும் கோரிக்கை சம்பந்தமாக அவ்வப்போது பேசப்படுகிறது.
குறையை நிரப்ப இந்த சந்தர்ப்பத்தில் உதவியை பெற்றுக்கொள்ள இருக்கும் ஒரே சிறந்த நண்பன் ரஷ்யா என்பதை ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் நாங்கள் இது சம்பந்தமாக பகிரங்கமாக ஊடகங்களிடம் தெரிவித்தோம்.
அரசாங்கத்திற்கும் தெரியப்படுத்தினோம்.
ரஷ்யாவிடம் எரிபொருளை பெற்றுக்கொள்ள பல்வேறு பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது என்பது தெளிவானது.
ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளை பெற்றுக்கொள்ள இலங்கை அரசாங்கம் முயற்சியோ அக்கறையோ கட்டவில்லை என்பது பிரதானமான காரணம்.
அமெரிக்கா எதிர்க்காது என்பதை உறுதியாக கூற முடியும்
அமெரிக்கா எதிர்ப்பை வெளியிடும் என்ற அச்சமே இதற்கு காரணம். இது முற்றிலும் பொய், அமெரிக்க தூரநோக்கில் பார்த்து செயற்படும் ஆட்சியாளர்கள் இருக்கும் நாடு.
இவ்வாறான நிலையில், இலங்கை கடும் கஷ்டத்திற்கு உள்ளாகி இருக்கும் இந்த தருணத்தில் நாம் எமது வாழ்க்கையை கொண்டு நடத்துவதற்கு தேவையான வசதிகளை பெற்றுக்கொள்வதை அமெரிக்கா எதிர்க்கும் என்று நாங்கள் நினைக்கவில்லை.
எந்த வகையிலும் அமெரிக்கா எதிர்க்காது என்பதை பொறுப்புடன் என்னால் கூற முடியும் எனவும் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.