ரஷ்யா உக்ரைன் இடையேயான பிரச்சனைக்கு மத்தியில், சப்ளை சங்கிலியில் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் ரஷ்யாவுக்கு எதிர்ப்பினை காட்டும் விதமாக பல நிறுவனங்களும், ரஷ்யாவினை விட்டு வணிகத்தினை விட்டு வெளியேறி வருகின்றன.
முன்னதாக சில தினங்களுக்கு முன்பு தான் நைக் நிறுவனம் ரஷ்யாவின் தனது வணிகத்தினை விட்டு வெளியேறியுள்ளது.
இந்த நிலையில் சிஸ்கோ நிறுவனம் ரஷ்யாவினை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளது.
ஜூலை 1 முதல் எதற்கெல்லாம் தடை.. உஷாரா இருங்க.. தடை மீறினால் அபராதம்?
வணிகத்தினை முடக்க முடிவு
நெட்வொர்க்கிங் நிறுவனம் மார்ச் 3 அன்று, ரஷ்யாவில் பெலாரஸிலும் எதிர்வரும் எதிர்காலத்தில் அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்துவதாக அறிவித்தது. அது உக்ரைனில் போரை நெருக்கமாக கண்கானித்து வருவதாகக் குறிப்பிட்டு, அதன் விளைவாக ரஷ்யாவிலும் பெலாராஸிலும் எங்கள் வணிகத்தினை முறையாக முடக்கத் முடிவு எடுக்கப்பட்டது.
ஊழியர்களுக்கு உதவும்
சிஸ்கோ இந்த சவாலான நேரத்தில் எங்கள் ஊழியர்கள், உக்ரைன் மக்களுக்கு உதவும் வகையில், சிஸ்கோ அனைத்து நடவடிக்கையும் எடுக்க திட்டமிட்டுள்ளது. மேலும் எங்களது கூட்டாளர்களுக்கும் உதவ சிஸ்கோ அதன் அனைத்து வளங்களையும் பயன்படுத்த உறுதி பூண்டுள்ளது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வளர்ச்சியில் தாக்கம்
எவ்வாறாயினும் ரஷ்யா மற்றும் பெலாரஸ் ஆகிய இரு நாடுகளிலும் வணிக நடவடிக்கைகளை நிறுத்துவதற்கான முடிவு, வருவாயில் எதிர்மறையான தாக்கத்தினை ஏற்படுத்தியது. நிறுவனத்திற்கு சிமார் 200 மில்லியன் டாலர் அல்லது 2% வளர்ச்சி புள்ளிகள் செலவாகும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
ரஷ்யாவில் இருந்து வெளியேறிய நிறுவனங்கள்
ரஷ்யாவின் படையெடுப்புக்கு பின்னரே, மேற்கத்திய நாடுகளின் நிறுவனங்கள் பலவும், ரஷ்யாவில் இருந்து வெளியேறத் தொடங்கியுள்ளன. ஆரம்பத்தில் சாப் மற்றும் ஆரக்கிள் உள்ளிட்ட டெக் நிறுவனகள் ரஷ்யாவினை விட்டு வெளியேறிய டெக் நிறுவனங்களாகும். மார்ச் மாத தொடக்கத்தில் மைக்ரோசாப்ட், ரஷ்யாவில் அதன் புதிய விற்பனையை நிறுத்துவதாக அறிவித்தது.
இதுவும் வெளியேற்றமா?
இந்த வாரம் ரஷ்யாவில் விண்டோஸ் 10 மற்றும் விண்டோஸ் 11ஐ நிறுவும் முயற்சிகள் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. எனினும் இது குறித்து ரஷ்யா எந்த விதமான அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியாகவில்லை.
Cisco announced plan to exit russia and belarus
Just a few days ago, Nike left its business in Russia. In this situation, Cisco has announced that it will leave Russia.