இந்தியாவில் உள்ள சங்கிலி தொடர் சூப்பர் மார்க்கெட்டுகள் ரஷ்யாவில் அனுமதிக்கப்படும் என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்புக்குப் பின்னர் முதல் முறையாக ரஷ்ய அதிபர் புதின் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்றார்.
இந்தியா, சீனா, ரஷ்யா, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளைக் கொண்ட பிரிக்ஸ் கூட்டமைப்பின் மாநாட்டில் சீன அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்கி இந்திய பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
ரஷ்யா வேண்டாம்.. வெளியேறும் அமெரிக்க காலணி நிறுவனம்.. என்ன காரணம்?
பிரிக்ஸ் மாநாடு
காணொளியில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்ட ரஷ்ய அதிபர் புதின் பேசும்போது ‘இந்திய சங்கிலித்தொடர் சூப்பர் மார்க்கெட்டுகளில் ரஷ்யாவில் திறப்பதற்காக ஆலோசனை செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.
ரஷ்ய அதிபர் புதின்
பிரிக்ஸ் மாநாடு என்பது பல்வேறு தரப்பு அமைப்புகளை சீர்திருத்த வேண்டும் என்பதற்காக நடந்து வருகிறது என்றும், இந்த 14-வது பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி என்றும் ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
கச்சா எண்ணெய்
ரஷ்யாவிலிருந்து இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு அதிக அளவில் கச்சா எண்ணெய் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் அதேபோல் மற்ற ஆசிய நாடுகளுக்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம் நடைபெற்று வரும் பணியில் ரஷ்யா ஈடுபட்டுள்ளது என்றும் புதின் தெரிவித்துள்ளார்.
வர்த்தகம்
அதேபோல் பிரிக்ஸ் அமைப்பில் உள்ள மற்ற நாடுகளுக்கும் வர்த்தகம் மற்றும் கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கான வழிகளை அமைக்கும் பணிகளில் ரஷ்யா ஈடுபட்டுள்ளது என்று புதின் தெரிவித்தார்.
இந்திய சூப்பர் மார்க்கெட்டுக்கள்
மேலும் ரஷ்ய சந்தையில் சீனாவின் கார்கள் மற்றும் இந்தியாவின் சூப்பர் மார்க்கெட்டுகளை திறக்க அனுமதி வழங்க ஆலோசனை செய்து வருவதாகவும் விரைவில் இதுகுறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் புதின் தெரிவித்தார்.
ரஷ்யாவில் கால்பதிக்கும் மார்க்கெட்டுக்கள்
புதினின் இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வந்தால் இந்தியாவில் உள்ள பல சங்கிலித்தொடர் சூப்பர் மார்க்கெட்டுக்கள் ரஷ்யாவில் கால்பதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒத்துழைப்பு
மேலும் மேற்கத்திய நாடுகள் சுயநல நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அதனை எதிர்ப்பதற்கு பிரிக்ஸ் நாடுகள் ரஷ்யாவுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் புதின் கேட்டுக்கொண்டார்.
‘Indian supermarket chains In Russia’ says Putin at BRICS conference
Indian supermarket chains In Russia’ says Putin at BRICS conference | ரஷ்யாவுக்கு செல்கிறது இந்திய சூப்பர் மார்க்கெட்டுக்கள்: புதின் அறிவிப்பு