ரிட்டையர் ஆனா பரவாயில்லை, மறுபடியும் வேலைக்கு வாங்க… டாடா அறிவிப்பு

ஏர் இந்தியா நிறுவனம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த போது கடும் கஷ்டத்தில் இருந்தது என்பதும் இதனையடுத்து ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா வாங்கினார் என்பது தெரிந்ததே.

ஏர் இந்தியா நிறுவனம், டாடாவின் வசம் வந்த பிறகு தற்போது லாபத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

ஏர் இந்தியாவின் புதிய நிர்வாகிகள் இந்நிறுவனத்தை லாபத்தை நோக்கி கொண்டு செல்ல பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் புதிய நடவடிக்கைகயாக ஓய்வு பெற்ற விமானிகளை மீண்டும் வேலைக்கு அமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

லோக்கல் மட்டும் பத்தாது, இண்டர்நேஷனலும் வேண்டும்: ஏர் இந்தியாவின் சூப்பர் பிளான்

ஏர் இந்தியா

ஏர் இந்தியா

ஏர் இந்தியா நிறுவனம் ஓய்வுபெற்ற விமானனிகளை 5 ஆண்டுகளுக்கு மீண்டும் பணியமர்த்த முடிவு செய்துள்ளதாகவும் இதனை அடுத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு கடிதம் எழுதி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஓய்வு பெற்ற விமானிகள்

ஓய்வு பெற்ற விமானிகள்

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்ற விமானிகளுக்கு தகவல் அனுப்பப்பட்டு வருவதாகவும் அவர்களை அடுத்து 5 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை பணியில் அமர்த்த முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் ஏர் இந்தியா நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.

300 புதிய விமானங்கள்
 

300 புதிய விமானங்கள்

ஏர் இந்தியா விமானம் விரைவில் 300 புதிய விமானங்களை வாங்குவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இந்த விமானங்கள் வாங்கப்பட்டுவிட்டால் கூடுதலாக விமானிகள் தேவை என்பதற்காக தான் ஓய்வு பெற்ற விமானிகளை பணியில் அமர்த்த ஏர் இந்தியா முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

விமானிகள் பற்றாக்குறை

விமானிகள் பற்றாக்குறை

உள்நாட்டு விமான துறையை பொருத்தவரை போதுமான பயிற்சி பெற்ற விமானிகள் பற்றாக்குறை கடந்த பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இதனால்தான் ஓய்வு பெற்ற விமானிகளை மீண்டும் வேலைக்கு அழைத்து அவர்களுக்கு பணி தர தயாராக இருப்பதாக ஏர் இந்தியா பணியாளர்களுக்கான துணை பொது மேலாளர் விகாஸ் குப்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

பறக்கும் படி

பறக்கும் படி

ஓய்வுக்குப் பின் பணியமர்த்தப்படும் விமானிகளுக்கு அவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவில் ஊதியம் தரப்படும் என்றும், அதேபோல் பறக்கும் படி உள்பட அனைத்து சலுகைகளும் வழங்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.

ஜூலை 23 கடைசி தேதி

ஜூலை 23 கடைசி தேதி

ஆர்வமுள்ள ஓய்வு பெற்ற விமானிகள் ஏர் இந்தியாவின் அதிகாரபூர்வ மின்னஞ்சலுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் ஜூலை 23ஆம் தேதி தான் விண்ணப்பிக்க கடைசி தேதி என்றும் தெரிவித்துள்ளார்.

ஓய்வு பெறும் வயது

ஓய்வு பெறும் வயது

ஏர் இந்தியா விமான நிறுவனத்தை பொருத்தவரை ஓய்வு பெறும் வயது 58 ஆக உள்ளது. ஏற்கனவே கொரோனா வைரஸ் காலத்தின்போது விமானிகள் பற்றாக்குறை இருந்தபோது ஓய்வுபெற்ற விமானிகளை ஏர் இந்தியா வேலைக்கு அமர்த்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் கூடுதலாக விமானம் வாங்குவதால் ஏர் இந்தியா விமான நிறுவனம் ஓய்வு பெற்றவர்களை பணியில் அமர்த்த திட்டமிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெட் ஏர்வேஸ்

ஜெட் ஏர்வேஸ்

ஏர் இந்தியா நிறுவனம் போலவே ஜெட் ஏர்வேஸ் நிறுவனமும் அதிக விமானங்களை களத்தில் இறக்க முடிவு செய்துள்ளதை அடுத்து அந்த நிறுவனமும் தங்களுடைய ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Air India New Offer To Pilots Post Retirement

Air India New Offer To Pilots Post Retirement | ரிட்டையர் ஆனா பரவாயில்லை, மறுபடியும் வேலைக்கு வாங்க… டாடா அறிவிப்பு

Story first published: Saturday, June 25, 2022, 6:47 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.