உலகின் மிக விலையுயர்ந்த தலையணையின் விலை இலங்கை ரூபாயின் மதிப்பில் 2 கோடியாகும். அது ஏன் அவ்வளவு விலை என்பதை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
ஆடம்பரமான வாழ்க்கை வாழ்வது அனைவரின் கனவு. ஆனால் மிகச் சிலரே அப்படி வாழ முடியும் என்பது . பல விலையுயர்ந்த கார்கள், வீடுகள் போன்றவை உள்ளன, ஆனால் விலையுயர்ந்த தலையணையைப் பற்றி நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?
தினமும் தலையனை பயன்படுத்தினாலும், இப்படி ஒருநாளும் கற்பனை செய்திருக்க மாட்டோம். ஆனால், உண்மையாகவே இந்த ஒரு தலையணையின் விலை 57,000 அமெரிக்க டொலர்களாகும் (இலங்கை ரூபாய் மதிப்பில் 2.05 கோடி).
உலகின் மிக விலையுயர்ந்த தலையணையின் சிறப்பு என்னவென்றால், நெதர்லாந்தைச் சேர்ந்த பிசியோதெரபிஸ்ட் ஒருவரால் இது பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சுமார் 15 வருட கடின உழைப்புக்குப் பிறகு இந்த தலையணை தயாரிக்கப்பட்டது. இது கூடுதல் வசதிக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தலையணையை உருவாக்கியவர் இந்த அதிசயத்தை இறுதியாகக் கண்டுபிடிக்க நிறைய ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.
இப்போது, அதன் அம்சங்களைப் பற்றி அறிந்து கொள்வோம். தலையணை தங்கம், வைரம், நீலமணி ரத்தினம், போன்றவற்றால் பதிக்கப்பட்டுள்ளதால் இதன் விலை மிக அதிகம். இந்த தலையணைக்குள் இருக்கும் பஞ்சு ரோபோ அரைக்கும் இயந்திரத்தில் (robotic milling machine) இருந்து எடுக்கப்பட்டது. இந்த தலையணையின் ஜிப்பில், நான்கு வைரங்கள் வைக்கப்பட்டுள்ளன.
தலையணை சாதாரணமாக விற்கப்படுவதில்லை, ஒரு பிராண்டட் பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது. தூக்கமின்மை (insomnia) உள்ளவர்களுக்கு தூங்குவதற்கு இது மிகவும் உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.