கடந்த சில மாதங்களாக கேஷ் டெபாசிட் மிசின்களில் 2000 ரூபாய் நோட்டுக்களை டெபாசிட் செய்ய முடியவில்லை என்ற குற்றச்சாட்டு வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
2000 ரூபாய் நோட்டுகளை கேஷ் டெபாசிட் மெஷின் ஏற்றுக் கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டுக்கு வங்கி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
மேலும் வங்கிகளில் தற்போது ஏடிஎம் மிஷின்களிலும் 2000 ரூபாய் நோட்டு வைக்கப்படவில்லை என்றும், 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகின்றன என்றும் கூறுகின்றனர்.
இனி அனைத்து வங்கி ஏடிஎம்-ல் டெபிட் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதி – ஆர்பிஐ அறிவிப்பு..!
பணமதிப்பிழப்பு நடவடிக்கை
2016ஆம் ஆண்டு மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கை நடவடிக்கை எடுத்ததை அடுத்து 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டன. அதற்கு பதிலாக புதிய 500 ரூபாய் மட்டும் 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன.
2000 ரூபாய் நோட்டுகள்
ஆரம்பத்தில் 2000 ரூபாய் நோட்டுகள் ஏழை எளிய, நடுத்தர வர்க்கத்தினர் முதல் பணக்காரர்கள் வரை சரளமாக புழங்கியது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுபட்டு வருகின்றன.
ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி புதிதாக 2,000 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கவில்லை என்றும் ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு வந்தால் அவை மீண்டும் புழக்கத்திற்கு அனுப்பப்படாது என்றும் ரிசர்வ் அறிவித்திருந்தது.
2000 நோட்டுக்கள் அச்சடிப்பு
கடந்த 2019ஆம் ஆண்டு முதல் 2000 ரூபாய் நோட்டுக்கள் புதிதாக அச்சடிப்பது நிறுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ஒரு சில 2000 ரூபாய் நோட்டுகள் தற்போது புழக்கத்தில் இருக்கும் நிலையில் அந்த நோட்டுகளை சிடிஎம் மெஷின் என்று கூறப்படும் கேஷ் டெபாசிட் மிசின்கள் ஏற்றுக்கொள்வதில்லை என்று வங்கி வாடிக்கையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
வங்கி வாடிக்கையாளர்
இதுகுறித்து வாடிக்கையாளர் ஒருவர் கூறியபோது நான் ஒவ்வொரு மாதமும் 2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்து வருகிறேன். ஆனால் கடந்த சில மாதங்களாக அந்த நோட்டுகளை வங்கியின் டெபாசிட் மிஷின்கள் ஏற்றுக்கொள்வதில்லை. சில நோட்டுகள் பழுதாகி விட்டதாக இயந்திரங்கள் காரணங்கள் கூறுகின்றன என்று கூறினார்.
வங்கி அதிகாரிகள் விளக்கம்
இதுகுறித்து மூத்த எஸ்பிஐ வங்கியின் அதிகாரி ஒருவர் கூறியபோது 2000 ரூபாய் நோட்டுகளை தற்போதும் ஏற்றுக்கொள்ளும் வடிவத்தில்தான் கேஷ் டெபாசிட் மெஷின்கள் உள்ளன. ஆனால் அதே நேரத்தில் நோட்டுகள் மடிப்பு அல்லது சேதமாகி இருந்தால் 2000 ரூபாய் நோட்டுகள் மட்டுமின்றி வேறு எந்த வடிவமாக இருந்தாலும் அவை இயந்திரங்கள் ஏற்றுக்கொள்ளாது. அத்தகைய குறிப்புகள்தான் இயந்திரங்களுக்கு வைக்கப்பட்டுள்ளன என்று கூறினார்.
ரூ.2000 நோட்டுக்களின் தரம்
வங்கிகள் கொடுக்கும் நோட்டுகளின் தரம் குறைவாக இருக்கும்போது அதே தரமுள்ள 2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் மிஷின்கள் மட்டும் ஏன் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதுதான் பெரும்பாலான வங்கி வாடிக்கையாளர்களின் கேள்வியாக இருக்கின்றது.
ஒரே தீர்வு
இதுகுறித்து தனியார் வங்கி நிர்வாகி ஒருவர் கூறும்போது 2000 ரூபாய் நோட்டுக்கள் பெரும்பாலும் பழையவை மற்றும் அதிகம் பயன்படுத்தப்பட்டதாக இருப்பதால் தான் இந்த சிக்கல் நேருகிறது என்றும் இதற்கு ஒரே வழி அனைத்து 2000 நோட்டுகளை ரிசர்வ் வங்கி திரும்பப் பெறுவது தான் என்றும் தெரிவித்துள்ளார்.
புழக்கம் குறைவு
ரிசர்வ் வங்கியின் தகவலின்படி 2000 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் தொடர்ந்து சரிந்து வருகிறது என்பதும் நாட்டில் புழக்கத்தில் உள்ள மொத்த கரன்சிகளில் 2.4 சதவீதம் மட்டுமே 2000 ரூபாய் நோட்டுகள் இருப்பதாக தெரிவித்துள்ளது. 2022ஆம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி 2000 நோட்டுக்களின் புழக்கம் 1.6 சதவீதமாக குறைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
Cash deposit machines not accepted Rs.2,000 notes? Here is the reason
Cash deposit machines not accepted Rs.2,000 notes? Here is the reason | ரூ.2000 நோட்டுக்களை இனி கேஷ் டெபாசிட் மிஷின் ஏற்று கொள்ளாதா? வங்கி அதிகாரிகள் விளக்கம்!