வங்கித் துறையில் என்னதான் பல தொழில் நுட்பங்கள் வளர்ந்து கொண்டு வந்தாலும், ஆங்காங்கே பல மோசடி சம்பவங்களும் அரங்கேறிக் கொண்டு தான் உள்ளன.
ஆக நமது வங்கிக் கணக்கில் என்ன தான் நடக்கிறது என்பது குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
3 நாள் விடுமுறை, சம்பளம் குறைவு: ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் புதிய தொழிலாளர் விதிகள்
சிறு சந்தேகம் வந்தாலும், வங்கியில் சென்று அதனை தெளிவு படுத்திக் கொள்வது நல்லது. அப்போது தான் ஆரம்பத்திலேயே தவறுகளை கண்டறிய முடியும். உங்களது பணத்தியினையும் பாதுகாக்க முடியும். என் கணக்கில் தான் பணமே இல்லையே. எனக்கு எந்த கவலையும் இல்லையே என்ற நினைப்பவர்களும் உண்டு. மற்றொருவரின் ஆவணங்களை பயன்படுத்தி மூன்றாம் நபர் ஒருவர் கடன் பெறுவதும் நடக்கலாம் என்பதையும் நினைவில் கொள்ளுங்க.
வங்கி மேலாளரிடம் மோசடி
அப்படி நடந்த ஒரு மோசமான சம்பவம் பற்றித் தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.
பெங்களூருவில் வாடிக்கையாளர்களின் பணத்தை மோசடி செய்து, இளம்பெண்ணுடன் டேட்டிங் செல்ல நினைத்த வங்கி மேலாளரிடம் இருந்து சூசகமாக 5.7 கோடி ரூபாயினை வாரி சுருட்டிய பெண்னை தான் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
டேட்டிங்
டேட்டிங்காக வங்கி மேலாளர் கோடிக்கணக்கில் பணத்தினை இழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தலாம். இதில் வேடிக்கையான விஷயம் என்னவெனில் அவர் இழந்தது அவரின் சொந்த பணமும் கிடையாது என்பது தான். அடுத்தவரின் பணத்தினை தவறாக பயன்படுத்தியதோடு, பல மோசடியிலும் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
இந்தியன் வங்கி மேலாளர்
டேட்டிங்காக ஆசைப்பட்ட வங்கி மேலாளர், தற்போது கைது செய்யப்பட்டு தீவிர விசாரணை நடந்து வருகின்றது. பெங்களூரு அனுமந்தநகர் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்தியன் வங்கி உள்ளது. அந்த வங்கியின் மேலாளராக ஹரிசங்கர் இருந்து வருகிறார். இவர் ஜெயநகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
30 கணக்குகள் மூலம் மோசடி
இவர் மோசடியாக 30 வேறுபட்ட கணக்குகள் மூலம், 5.7 கோடி ரூபாய் பணத்தினை மோசடி செய்து மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து இந்தியன் வங்கியின் மண்டல மேலாளர் டிஎஸ் மூர்த்தி அளித்துள்ள புகாரின் பேரில் தற்போது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் மத்தியில் சங்கரின் உதவியாளர்களான கெளசல்யா ஜெராய் மற்றும் எழுத்தர் முனிராஜு ஆகியோரினையும் சந்தேக நபர்களாக விசாரித்து வருவதாக கூறப்படுகின்றது.
சைபர் கிரிமினல்கள் வேலையா?
தற்போது விசாராணைக்காக 10 நாள் போலீஸ் காவலில் ஹரி சங்கரை வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேற்கண்ட மோசடி வேலைகள் மே 13 – 19க்கு இடையிலான காலகட்டத்தில் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இளம் பெண்கள் மீதான ஆசையினை தவறாக பயன்படுத்திக் கொண்ட சைபர் கிரிமினல்கள், இந்த மோசடி மூலம் பணத்தினை இழந்துள்ளதாகவும் சங்கர் தெரிவித்துள்ளார்.
டெபாசிட் தொகை -கடன்
போலீசார் அறிக்கையின் படி, மோசடி நடந்த கிளையில் அனிதா என்பவர் தனது கணக்கில் 1.32 கோடி ரூபாயை டெபாசிட் செய்துள்ளார். அதனை வைத்து அவர் 75 லட்சம் ரூபாய் கடனாகவும் பெற்றுள்ளார். இதற்காக அவர் உரிய ஆவணங்களையும் சமர்பித்துள்ளார். ஆனால் குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகள் ஆவணங்களை திருத்தி, அதன் மூலம் சட்டவிரோதமாக சிலர் பல கோடி ரூபாய் கடனும் பெற்றுள்ளனர்.
பல வாடிக்கையாளர்களின் கணக்கில் மோசடி
அனிதாவின் கணக்கில் மட்டும் அல்ல, இன்னும் சில வாடிக்கையாளர்களின் கணக்கிலும் மோசடி நடந்துள்ளதாக தெரிகிறது. இதன் பிறகு வங்கி தரப்பிலும் விசாரணை நடந்துள்ளது. அதன் பிறகே பிரச்சனை விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளது. மொத்தத்தில் இந்த விசாராணைக்கு பிறகே எவ்வளவு பணம், யார் இதற்கு காரணம்? அந்த டேட்டிங் பெண் யார் என்பது உள்ளிட்ட பல விவரங்களும் தெரியவரும்.
பல பரிமாற்றம்
இப்படி பல கட்ட விசாராணைக்கு பிறகே அனிதாவின் டெபாசிட் தொகை மூலமாக அவரது பெயரில் 5.70 கோடி ரூபாய்க்கு கடன் பெற்றிருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பணம் பெங்களூருவில் உள்ள வங்கியில் இருந்து கர்நாடகத்தில் உள்ள 2 வங்கிகளுக்கும், மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள 28 வங்கி கணக்குகளுக்கும் மாற்றப்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.
மற்றொரு வாடிக்கையாளாரிடமும் மோசடி
மற்றொரு வாடிக்கையாளரின் வங்கி கணக்கில் இருந்து 11 லட்சம் ரூபாய் வேறு வங்கி கணக்குக்கு மாற்றப்பட்டு இருப்பதும் தெரிய வந்ததுள்ளது. இந்த மோசடியில் அந்த வங்கியின் மேலாளர் ஹரிசங்கரே ஈடுபட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது. இந்த மோசடியின் மூலம் ஹரி சங்கரின் வங்கி கணக்குக்கும் 12.5 லட்சம் மட்டும் மாற்றப்பட்டு இருந்தது தெரிய வந்துள்ளது.
டேட்டிங்க் ஆப்
டேட்டிங் ஆப் மூலமாக ஒரு இளம்பெண்ணுடன் பழகி வந்துள்ள சங்கர், அவருடன் தினமும் டேட்டிங் செய்து வந்துள்ளதுடன், அந்த இளம்பெண் கேட்கும் போதெல்லாம் பணமும் கொடுத்து வந்துள்ளார். இளம்பெண் மீதான மோகத்தால் அவர் கூறிய வங்கி கணக்குகளுக்கு 5.70 கோடியை ஹரிசங்கர் அனுப்பி வைத்ததும் தெரிய வந்துள்ளது.
அடுத்தவரின் பணம்
ஹரி சங்கரின் மனைவி சொந்த ஊர் கேரள மாநிலம் ஆகும். கர்ப்பிணியாக இருந்த அவருக்கு குழந்தை பிறந்துள்ளதால், தற்போது கேரளாவில் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். இதன் காரணமாக பெங்களூருவில் தனியாக இருந்த ஹரிசங்கர் டேட்டிங் செல்போன் செயலி மூலமாக இளம்பெண்ணுடன் டேட்டிங் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். பெண்னின் மீது கொண்டுள்ள பல கோடியினை வாரி வழங்கிய சங்கர், அது அடுத்தவரின் பணம் என்பதையும் யோசிக்க மறந்து விட்டார்.
big alert! Bank manager defrauded of Rs 5.7 crore: Should bank customers be wary
Indian bank manager loses Rs 5.7 crore illegally through dating app