தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை குறித்த தவறான தகவல்களை வெளியிட்ட யூ-டியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நீரிழிவு நோய் உள்ள நிலையில், சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விஜயகாந்தின் கால் விரல்கள் அகற்றப்பட்டுள்ளன.
இச்சூழ்நிலையில் இரு யூ-டியூப் சேனல்கள் விஜயகாந்தின் உடல்நிலை குறித்து தவறான தகவல்களைப் பரப்பியதாகத் தெரிகிறது. அவை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தேமுதிக துணைச் செயலாளர் பார்த்தசாரதி டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.