மும்பை நோக்கி சென்ற கோ பர்ஸ்ட் நிறுவன விமானத்தில் ஏசி இயந்திரம் இயங்காததால் நடுவானில் 3 பயணிகள் மயங்கி விழுந்தனர்.
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் இருந்து புறப்பட்ட கோ பர்ஸ்ட் நிறுவன விமானத்தில், ஏசி இயந்திரம் இயங்கவில்லை. புழுக்கம் தாங்க முடியாமல் காகிதங்களை விசிறியாக பயணிகள் வீசிய நிலையில், காற்றோட்ட வசதியில்லாமல் 3 பயணிகள் மயங்கி விழுந்தனர்.
விமானத்தில் புழுக்கத்துடன் பயணிகள் தவிப்பதாகவும், நோயாளிகள் உள்ளிட்டோர் கடும் அவதியடைந்துள்ளதாகவும் பெண் பயணி வெளியிட்ட வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.