விருதுநகரில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து.!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்த நிலையில், விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

காரியாபட்டி-திருச்சுழி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளங்கோவன் என்பவர் மீது எதிர்திசையில் மதுரை நோக்கி அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் கவனக்குறைவால் பலமாக மோதியது.

நேருக்கு நேர் மோதிய வேகத்தில் இரு வாகனங்களில் இருந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். தகவலறிந்து வந்த போலீசார் படுகாயமடைந்த மூவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் சிகிச்சை பலனின்றி இளங்கோவன் உயிரிழந்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.