விலைவாசி உயர்வால் ஆடிப்போன பிரித்தானியர்கள்: சமாளிப்பதற்காக எடுத்திருக்கும் நடவடிக்கை



விலைவாசி உயர்வால் ஆடிப்போயிருக்கும் பிரித்தானியர்கள், உணவுப்பொருட்கள் வாங்குவதைக் குறைத்துள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உயர்ந்து வரும் பண வீக்கத்தால் இதுவரை இல்லாத அளவில் நம்பிக்கை இழந்துள்ள மக்கள், ஷாப்பிங் செய்வதைக் குறைத்திருகிறார்களாம்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தேசிய புள்ளியியல் அலுவலகம், மே மாதத்தில் பிரித்தானியாவில் வியாபாரத்தின் அளவு 0.5 சதவிகிதம் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

குறிப்பாக மக்கள் உணவுப்பொருட்களை வாங்குவதைக் குறைத்ததால் இந்த வியாபார அளவு குறைந்துள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் ஆய்வுகள் மற்றும் பொருளாதார குறிகாட்டிகள் பிரிவின் துணை இயக்குநரான Heather Bovill தெரிவித்துள்ளார்.

விலைவாசி உயர்வு காரணமாக, மக்கள் உணவுப் பொருட்கள் வாங்குவதைக் குறைத்துள்ளதாக பல்பொருள் அங்காடிகள் தெரிவித்துள்ளதாக அவர் தெரிவிக்கிறார்.

இதற்கிடையில், பிரித்தானியாவின் நீண்ட கால நுகர்வோர் ஆய்வு அமைப்பான the GfK survey, பிரித்தானிய மக்கள் இதுபோன்ற சோர்வான மனநிலையை பலமுறை சந்தித்திருக்கிறார்கள், 2016 பிரெக்சிட் வாக்கெடுப்பின் விளைவாகவும், 2008 உலக பொருளாதார நெருக்கடியின்போதும், கோவிட் காலகட்டத்தின்போதும்… ஆனால், அவை எல்லாவற்றைவிடவும், இப்போது நுகர்வோரின் மன நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என்கிறது.

முன்பெல்லாம், தரத்தைப் பார்த்து பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் பலர், இப்போது விலையைக் கவனித்து பொருட்களை, குறிப்பாக உணவுப் பொருட்களை வாங்கத் துவங்கியிருக்கிறார்கள் என்கிறார் பிரித்தானிய சில்லறை வர்த்தக அமைப்பைச் சேர்ந்த Helen Dickinson.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.