ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை ஆட்சியில் இருந்தும் அகற்றும் ரகசிய நகர்வுகள் ஏற்கனவே செயல்பட தொடங்கியுள்ளதாக உளவாளிகள் தரப்பு உறுதி செய்துள்ளது.
விளாடிமிர் புடினின் நெருங்கிய வட்டாரத்தில் இருந்தே, அவருக்கு பேரதிர்ச்சியை அளிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீதான படையெடுப்பால் தற்போது பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும், விளாடிமிர் புடினுக்கு நெருக்கமான பெரு முதலாளிகளே அவரை ஆட்சியில் இருந்து அகற்றும் நடவடிக்கைகளில் ரகசியமாக களமிறங்கியுள்ளனர்.
மேலும், உக்ரைன் மீதான படையெடுப்பு தெற்கு நோக்கி நகரும் என்றால், புடினுக்கு பேரதிர்ச்சி காத்திருக்கிறது என்றே கூறுகின்றனர்.
புடின் விவகாரத்தில், அவரது உண்மை குணம் அறிந்தவர்கள் என்பதால், அனைத்து நகர்வுகளும் ரகசியம் காக்கப்படுகிறது.
அல்லது, புடின் கைகளால் மரணம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே என்பதால், அவருக்கு சந்தேகம் ஏற்படாத வகையில் நகர்வுகள் முன்னெடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
விளாடிமிர் புடினுக்கு சாகவாசம் அளிக்காமல், ஒருங்கிணைந்து தாக்கவே திட்டமிட்டு வருகின்றனர்.
இதனால், விளாடிமிர் புடின் கொல்லப்படலாம் எனவும், அல்லது அவரால் கண்டிப்பாக திருப்பி அடிக்க முடியும் என்பதை நன்கு உணர்ந்திருப்பதால் இந்த முடிவு என எதிர் தரப்பு கூறுகின்றனர்.
உக்ரைன் மீதான படையெடுப்பு தான், அவரது நெருங்கிய வட்டாரத்தை அவர் மீது திருப்பியதாக கூறுகின்றனர்.
விளாடிமிர் புடினை நேரிடையாக சந்தித்து, ஆட்சியை விட்டு விலக கோரினால், அப்படி ஒருவர் பின்னர் உயிருடன் திரும்ப வாய்ப்பில்லை என்றே ரஷ்யாவுக்கான முன்னாள் அமெரிக்க உளவுத்துறை அதிகாரி Daniel Hoffman கூறுகின்றார்.
இதனிடையே, விளாடிமிர் புடினின் தற்போதைய உடல் நிலை ரஷ்யாவுக்கு மிக விரைவில் ஒரு புதிய தலைவர் பொறுப்புக்கு வருவார் என்பதை சுட்டிக்காட்டுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதில், புடினுக்கு பதிலாக மூவர் பெயர் முன்வைக்கப்படுகிறது. Nikolai Patrushev, Alexander Bortnikov மற்றும் பாதுகாப்பு அமைச்சர் Sergei Shoigu.
இதில் பெரும்பாலும் பாதுகாப்பு அமைச்சர் Sergei Shoigu விளாடிமிர் புடினுக்கு பதிலாக ஆட்சி பொறுப்பில் வரலாம் என கூறப்படுகிறது.
ஆனால், விளாடிமிர் புடின் ஆட்சியில் இருந்து விலக்கப்பட்டால், பலரது பதவி ஆசை வெளிப்படும் எனவும் கூறுகின்றனர்.
இருப்பினும், உக்ரைனில் குறிப்பிட்ட பகுதிகளில் விளாடிமிர் புடினின் துருப்புகள் முன்னேற்றம் கண்டு வருவதால் தற்போதைய சூழலில் அவர் பாதுகாப்பாகவே இருக்கிறார் என முன்னாள் அமெரிக்க உளவாளி ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.