இந்திய கிரிக்கெட் அணி முதன் முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றிய இன்றைய தினம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
1983 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற தொடருக்கு சென்ற இந்திய அணி, ஜாலி சுற்றுப்பயணமே மேற்கொள்கிறது என விமர்சிக்கப்பட்டது.
அதுவும் இறுதிப் போட்டியில் 183 ரன்களுக்கு ஆல் ஆவுட் ஆன நிலையில், எதிர் அணியான மேற்கு இந்திய தீவுகள் அணி தொடர்ந்து 3-வது முறையாக கோப்பையை கைப்பற்றும் என அனைவரும் எதிர்பார்த்தனர்.
எனினும், ஹரியானா சிங்கமான இந்திய அணியின் கேப்டன் கபில் தேவின், போராடுவோம் என்ற வார்த்தைக்கு இனங்க வீரர்கள் விளையாடியதால், கோப்பையை வசப்படுத்தியது.