‘விக்ரம்’ படத்தில் வில்லன்களின் கோடு வேர்டாக மன்சூர் அலிகானின் ‘சக்கு சக்கு வத்திக்குச்சி’ பாடல் பயன்படுத்தப்பட்டு ஹிட்டான நிலையில், 27 வருடங்கள் கழித்து மீண்டும் அந்தப் பாடலுக்கு அதே எனர்ஜியுடன் மன்சூர் அலிகான் ஆடிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இளம் இயக்குநரான லோகேஷ் கனகராஜ் தனது படங்களில் 80, 90-களில் வெளியான அதிரடி பாடல்களை, தனது படத்தில் வில்லன்களுக்கு பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளார். அதன்படி ‘கைதி’ படத்தில் நடிகை ரோகிணியின் பேமஸான நடன அமைப்பில் உருவான ‘ஆசை அதிகம் வச்சு’ பாடலை பயன்படுத்தியிருந்தார். இதற்கு நல்ல வரைவேற்பு கிடைத்தது. அதேபோல் தற்போது 400 கோடி ரூபாய் வசூலை நெருங்கியும் வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘விக்ரம்’ படத்தில் வில்லன்களின் கோடு வேர்டாக மன்சூர் அலிகானின் ‘சக்கு சக்கு வத்திக்குச்சி’ பாடலை பயன்படுத்தியிருப்பார் லோகேஷ் கனகராஜ்.
ஆனால், ‘கைதி’ படத்தில் பயன்படுத்தப்பட்ட ‘ஆசை அதிகம் வச்சு’ பாடலை விட இது அதிகளவில் ரசிகர்களிடையே ரீச் ஆகியிருக்கும். ஏனெனில் மன்சூர் அலிகானின் ஆட்டிட்யூட் அந்தப் பாடலில் மட்டுமில்லை, பொதுவாகவே அப்படித் தான் இருக்கும். இதனை லோகேஷ் கனகராஜூம் ஒரு நேர்காணலில் தெரிவித்து இருப்பார். மேலும் அவரை வைத்து ஒரு படம் பண்ண வேண்டும் என்றும் லோகேஷ் தெரிவித்து இருந்தார்.
இதனாலேயே இந்தப் பாடல் மிகப் பெரிய அளவில் ரசிகர்களிடையே சென்றடைந்தது. கடந்த 1995-ம் ஆண்டு வேலு பிரபாகரன் இயக்கத்தில், அருண் பாண்டியன், நெப்போலியன், மன்சூர் அலிகான், செந்தில், ராதா ரவி, ரோஜா ஆகியோர் நடிப்பில் வெளியான ‘அசுரன்’ படத்தில், ஆதித்யன் இசையமைப்பில் உருவான பாடல் தான் ‘சக்கு சக்கு வத்திக்குச்சி’. இந்நிலையில், இந்தப் பாடல் மீண்டும் பிரபலமடைந்ததையொட்டி, அந்தப் பாடலுக்கு சுமார் 27 வருடங்கள் கழித்து அதே எனர்ஜியுடன் மன்சூர் அலிகான் நடனமாடியுள்ள வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
`சக்கு சக்கு வத்திக்குச்சி’ ரீ – க்ரியேஷன் வித் மன்சூர் அலிகான்!#MansoorAliKhan | #Dance pic.twitter.com/YM2xNgZBa3
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) June 25, 2022