வாரத்திற்கு மூன்று நாட்கள் விடுமுறை, நான்கு நாட்கள் மட்டுமே பணிகள் என்றாலும் ஊழியர்கள் வாங்கும் சம்பளம் குறைவாக இருக்கும் என்ற புதிய தொழிலாளர்கள் விதி வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 1-ஆம் தேதி முதல் புதிய தொழிலாளர் விதி அமலுக்கு வரும் என ஏற்கனவே மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த விதிகள் மூலம் வார விடுமுறை அதிகமானாலும் அதிகமான பிஎஃப் தொகை கட்ட வேண்டிய நிலை ஏற்படும் என்பதால் தொழிலாளர்கள் கையில் வாங்கும் சம்பளம் குறைவாக இருக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
ஊழியர்களுக்கு நன்மை.. ஜூலை 1 முதல் புதிய தொழிலாளர் சட்டம் அமலுக்கு வருமா?
புதிய தொழிலாளர் விதிகள்
ஒரு சில ஆண்டுகளாக பரிசீலனை செய்யப்பட்ட புதிய தொழிலாளர் சட்ட விதிமுறைகள் தொழிலாளர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் சில திருத்தங்களை செய்து ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.
தமிழ்நாட்டில் இல்லை
இருப்பினும் தமிழ்நாடு உள்பட ஒரு சில மாநிலங்கள் இந்த புதிய தொழிலாளர் விதியை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதால் ஜூலை 1 முதல் அந்த மாநிலங்களில் புதிய தொழிலாளர் விதிகள் அமலுக்கு வராது. ஜம்மு காஷ்மீர், இமாச்சல பிரதேசம், பீகார், பஞ்சாப், ஹரியானா, அருணாசலப் பிரதேசம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்கள் புதிய தொழிலாளர்கள் விதிகளை ஏற்றுக் கொண்டுள்ளன என்பதால் ஜூலை 1-ஆம் தேதி முதல் மேற்கண்ட மாநிலங்களில் புதிய தொழிலாளர் விதிகள் அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
12 மணி நேரம் வேலை
புதிய தொழிலாளர் விதிகளின்படி ஊழியர்களை பணி நேரம் 8 மணி நேரத்திற்குப் பதிலாக 12 மணி நேரமாக அதிகரிக்கும். ஆனால் அதே நேரத்தில் அதனை ஈடுகட்டும் வகையில் வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பணியாளர்கள் ஒரு வாரத்தில் பணி செய்யும் மொத்த வேலை நேரம் மாறுவதற்கு வாய்ப்பில்லை.
3 நாட்கள் விடுமுறை
எட்டு மணி நேரம் தற்போது வேலை பார்க்கும் ஊழியர்கள் வாரத்திற்கு ஒரு நாள் மட்டுமே விடுமுறையாக பெறுகிறார்கள். ஆனால் புதிய விதியின் படி நான்கு நாட்கள் மட்டுமே வேலை இருக்கும் என்பதும் மூன்று நாட்கள் விடுமுறை இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வருங்கால வைப்பு நிதி
இந்த நிலையில் புதிய தொழிலாளர் விதியின்படி ஊழியர்களுக்கு பிடித்தம் செய்யப்படும் வருங்கால வைப்பு நிதி அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஒரு ஊழியரின் மொத்த சம்பளத்தில் 50 சதவீதம் அடிப்படை சம்பளமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஊழியர்கள் மற்றும் நிறுவனங்கள் வைப்பு நிதிக்கு செலுத்த வேண்டிய தொகை அதிகம் என்பதால் ஊழியர்கள் கையில் வாங்கும் சம்பளம் குறைய வாய்ப்பு உள்ளது. ஆனால் அதே நேரத்தில் ஊழியர்கள் ஓய்வு பெறும் போது அவர்களுக்கு கிடைக்கும் தொகை மிகப்பெரியதாக இருக்கும் என்பதும் ஓய்வுக்குப் பின் அவர்களுடைய வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
விடுமுறை
புதிய தொழிலாளர் விதியில் ஊழியர்கள் எடுக்கும் விடுமுறையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஊழியர்களின் ஓராண்டு எஞ்சியிருக்கும் விடுமுறையை அவர்கள் அடுத்த பணி ஆண்டில் சேர்த்துக் கொள்ளலாம் என்ற தளர்வுகள் செய்யப்பட உள்ளன.
மத்திய அரசு நம்பிக்கை
இந்தியாவின் பல மாநிலங்களில் அமல்படுத்தப்படும் இந்த புதிய தொழிலாளர் விதிகளை தமிழகம் உள்பட மற்ற மாநிலங்களும் விரைவில் ஏற்றுக் கொள்ளும் என்று மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
New Labour Laws From July 1.. Salary, PF, Working Hours changes!
New Labour Laws From July 1.. Salary, PF, Working Hours changes! | 3 நாள் விடுமுறை, சம்பளம் குறைவு: ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் புதிய தொழிலாளர் விதிகள்