இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் ஜவுளி துறை 25 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் மதிப்புக்கு வளர்ச்சி அடையும் என்றும், அதில் 40 சதவீதம் ஏற்றுமதியாக இருக்கும் எனவும் மத்திய வர்த்தகதுறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
கோவை கொடிசியா வளாகத்தில் மத்திய இணை அமைச்சர் முருகனுடன் இணைந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக பொருளாதார வளர்ச்சியில் ஜவுளி துறை முக்கிய பங்கு வகிப்பதாக கூறினார்.
ஜவுளி துறையின் வளர்ச்சிக்காக, மேலும் ஒரு உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாகவும், அது தொடர்பாக விரைவில் அறிவிக்கப்படும் என்றும் பியூஷ் கோயல் தெரிவித்தார்.