வாஷிங்டன்: நீண்ட காலமாக நடைமுறையில் இருந்த கருக்கலைப்பு சட்டத்திற்கு அமெரிக்க சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. இது அங்கு வாழும் பெண்களுக்கு பெரும் கவலையை தந்துள்ளது. கருக்கலைப்பு எங்கள் அடிப்படை உரிமை என கோரும் கருக்கலைப்பு ஆதரவாளர்கள் பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கருக்கலைப்பு என்பது அடிப்படை உரிமையாக கேட்டு பல அமெரிக்க பெண்கள் அமைப்பினர் கடந்த 1973 முதல் சட்ட போராட்டங்கள் நடத்தி இந்த தார்மீக உரிமையை 50 ஆண்டு காலமாக பின்பற்றி வந்தனர். இந்நிலையில் அமெரிக்க உச்ச அதிகாரம் கொண்ட சுப்ரீம் கோர்ட் ரத்து செய்வதாக தெரிவிக்கிறது.
நல்லதா ? கெட்டதா ?
ஆனால் ” இது கோர்ட்டிற்கும் , தேசத்திற்கும் ஒரு கவலையான நாள் ” என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.
அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி, ” காலை வணக்கம் சொல்லி பயனில்லை. இது ஒரு அவப்படுத்தும் தீர்ப்பு , மேலும் பெண்களின் உரிமைக்கும், உடல் நலத்திற்கும், பாதுகாப்பிற்கும் கேடு தருகிறது” என்றார்.
நீண்ட காலமாக இருந்த சட்ட ரத்தால் பல பெண்களின் உரிமை பாதிக்கப்படுவதாக கருக்கலைப்பு ஆதரவாளர் ஒருவர் கூறுகிறார்.
கோர்ட்டின் உத்தரவை அடுத்து பல மாகாணங்களில் கருக்கலைப்புக்கு தடை விதிக்கப்படும். இந்த தீர்ப்புக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பல இடங்களில் பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Advertisement