Fitness alert: தொப்பை கொழுப்பை குறைக்க தினமும் இந்த யோகா பண்ணுங்க!

தொப்பை என்பது பலர் அனுபவிக்கும் பொதுவான பிரச்சினைகளில் ஒன்றாகும். உடற்பயிற்சிகளை தவறாமல் செய்வது வலிமையை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், தொப்பை கொழுப்பைக் குறைக்கவும் உதவுகிறது. வழக்கமான உடற்பயிற்சி, கூடுதலாக, அடிவயிற்றை உறுதிப்படுத்தவும், தசை வலிமையை உருவாக்கவும் உதவுகிறது.

யோகா பயிற்சியாளர் ஜூஹி கபூர், பிடிவாதமான தொப்பை கொழுப்பைக் குறைக்க உதவும் பயிற்சிகளைப் பகிர்ந்து கொண்டார்.

“இந்தப் பயிற்சியை தொப்பை உள்ளவர்கள் அனைவரும் செய்யலாம்” என்று கபூர் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவில் கூறினார்.

பாருங்கள்

எப்படி செய்வது?

இந்த உடற்பயிற்சியில் நான்கு படிகள் உள்ளன

*வீடியோவில் காட்டியபடி, இரண்டு கால்களையும் 90 டிகிரியில் வைக்கவும்

*இடது கால் 90 டிகிரி, வலது கால் 60 டிகிரி

*வலது கால் 60 டிகிரி, இடது கால் 90 டிகிரி

*இப்போது இரண்டு கால்களையும் 60 டிகிரியில் வைக்கவும்

எவ்வளவு நேரம் பயிற்சி செய்ய வேண்டும்?

முழு செட்டுக்கு மூன்று-நான்கு சுற்றுகள்.

பலன்கள்

* நீங்கள் உங்கள் கழுத்தை காயப்படுத்த மாட்டீர்கள்; ஏனெனில் இந்த உயிற்பயிற்சியில் எந்த அழுத்தமும் இருக்காது.

*இது அடிவயிற்று பகுதி, முதுகு தண்டை வலுப்படுத்த உதவுகிறது

* கால்களை வலுப்படுத்துகிறது

* பிரசவத்திற்கு பிறகு செய்ய ஏற்றது (6 மாதங்களுக்குப் பிறகு சி-பிரிவு/அல்லது மருத்துவர் பரிந்துரைபடி)

*பின்பக்க கழுத்து வலி பிரச்சினைகளின் போதும் செய்யலாம்

“பிரசவத்திற்குப் பிந்தைய தொப்பை கொழுப்பின் விஷயத்தில் – முக்கிய தசைகளை வலுப்படுத்துவதற்கு இது நிறைய செய்ய வேண்டும்,” என்று அவர் கூறினார்.

எச்சரிக்கை

*வயிற்று அறுவை சிகிச்சை அல்லது பிரசவம்/சி-பிரிவு செய்த உடனேயே தவிர்க்கவும்

*சி-பிரிவுக்குப் பிறகு ஆறு மாதங்கள் வரை அல்லது மருத்துவரால் பரிந்துரைக்கப்படும் வரை, பயிற்சி செய்யக்கூடாது.

*கீழ் முதுகு வலி ஏற்பட்டால் தவிர்க்கவும்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.