Samsung Galaxy M52 5G Offer Price: குறைந்த பட்ஜெட்டில் சக்திவாய்ந்த அம்சங்களுடன் வரும் ஸ்மார்ட்போனை வாங்க நினைத்தால், உங்களுக்கு நல்ல வாய்ப்பு அமைந்துள்ளது. நீங்கள் சாம்சங்கின் பெஸ்ட்செல்லர் ஸ்மார்ட்போனை பம்பர் தள்ளுபடியுடன் வாங்கலாம்.
நீங்கள் சாம்சங்கின் 5G ஸ்மார்ட்போனை வங்கி சலுகைகளுடன் மலிவாக வாங்கலாம். அந்தவகையில், Samsung Galaxy M52 5G ஸ்மார்ட்போனானது ரூ.12,000 ரூபாய் பம்பர் தள்ளுபடியுடன் வாங்க வாய்ப்பு உள்ளது.
சாம்சங் கேலக்ஸி எம்52 போன், இரண்டு சேமிப்பு வகைகளுடன் வருகிறது. போனில் 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது. இதன் விலை மற்றும் பிற அம்சங்களை விரிவாகப் பார்க்கலாம்.
சாம்சங் 5ஜி போனை குறைந்த விலையில் எப்படி வாங்குவது?
கேலக்ஸி M52 5G ஸ்மார்ட்போனானது 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் சாம்சங் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த போன் 6ஜிபி ரேம் + 128ஜிபி சேமிப்பகம், 8ஜிபி ரேம் + 128ஜிபி சேமிப்பகம் ஆகிய இரு வேரியண்டுகளில் வருகிறது.
1G to 5G: 1G முதல் 5G மொபைல் நெட்வொர்க் வரை… வரலாற்றை திரும்பிபார்ப்போம்!
இந்த கவர்ச்சிகரமான சலுகையைப் பெற ரிலையன்ஸ் டிஜிட்டலில் இருந்து போனை வாங்க வேண்டும். 8 ஜிபி ரேம் கொண்ட இந்த போனின் விலை ரூ.31,999. ஆனால், 21,999 ரூபாய்க்கு மட்டுமே கொடுத்து வாங்க முடியும். 6ஜிபி ரேம் மாடலை ரூ.9,000 தள்ளுபடிக்கு பிறகு ரூ.29,999க்கு பதிலாக ரூ.20,999 கொடுத்து வாங்கலாம்.
Nothing Phone (1): நத்திங் போன் 1 ஆர்டர் பண்ணலாமா? Pre-order லிங் உங்களுக்காக!
இதுமட்டுமில்லாமல், Citibank Credit & Debit Cards வாடிக்கையாளர்களுக்கு 10 விழுக்காடு (Rs. 3000 வரை) தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதேபோல, IndusInd Bank Credit மாத சுலப தவணைத் திட்டத்தில் போனை வாங்குபவர்களுக்கு ரூ.1,500 கேஷ்பேக் கிடைக்கிறது. ZestMoney EMI மூலம் வாங்கினால் 10% தள்ளுபடி கிடைக்கும்.
சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy M52 5g specifications)
Samsung Galaxy M52 5G ஆனது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தைக் கொண்ட முழு எச்டி+ 6.7 இன்ச் சூப்பர் AMOLED பிளஸ் டிஸ்ப்ளேயை கொண்டுள்ளது. இது புகைப்படம் எடுப்பதற்கான 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார் கொண்ட மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.
Vivo Y21 Offer: ரூ.2,600க்கு விவோ போன்; எப்படி வாங்குவது என்று பாருங்கள்!
முன்பக்கத்தில் செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புக்காக 32 மெகாபிக்சல் கேமரா உள்ளது. போன் திறன்வாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி (Snapdragon 778G) புராசஸரைக் கொண்டுள்ளது. போனை சக்தியூட்ட 5,000mAh பேட்டரியும், அதனை ஊக்குவிக்க 25 வாட் வேகமான சார்ஜிங் ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.
Samsung-Galaxy-M52-5G விவரங்கள்முழு அம்சங்கள்ஃபெர்பார்மன்ஸ்Qualcomm Snapdragon 778Gடிஸ்பிளே6.7 inches (17.02 cm)சேமிப்பகம்128 GBகேமரா64 MP + 12 MP + 5 MPபேட்டரி5000 mAhஇந்திய விலை24999ரேம்6 GBமுழு அம்சங்கள்
Samsung-Galaxy-M52-5GG308205