அதிமுக தொண்டர்கள் தன் பக்கம் தான் உள்ளதாகவும், தன்னுடைய எதிர்காலத்தை தொண்டர்களும், மக்களும் தான் நிர்ணயிப்பார்கள் என்றும் அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் பேட்டியளித்த அவர், அதிமுகவில் நிலவும் அசாதாரண சூழல் யாரால் ஏற்பட்டது என்பது விரைவில் வெளிச்சத்திற்கு வரும் என குறிப்பிட்டார்.
இதனை அடுத்து, மதுரையில் இருந்து தேனி சென்ற பன்னீர்செல்வத்திற்கு, அவரது ஆதரவாளர்கள் ஆங்காங்கே வரவேற்பளித்தனர்.