அமாவாசையை முன்னிட்டு சதுரகிரிக்குச் செல்ல பக்தர் களுக்கு இன்று (ஜூன் 26) முதல் 29-ம் தேதி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம், வத்தி ராயிருப்பு அருகே சதுரகிரியில் உள்ள சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்களில் தரிசனம் செய்ய மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்களுக்கு அனுமதி அளிக் கப்படுகிறது.
வரும் 28-ம் தேதி அமாவா சையை முன்னிட்டு இன்று (ஜூன் 26) முதல் 29-ம் தேதி வரை சதுரகிரிக்குச் செல்ல பக்தர்களுக்கு கோயில் நிர்வா கமும், வனத்துறையும் அனுமதி அளித்துள்ளன.
அதேநேரம், இந்நாட்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப் பட்டாலோ அல்லது மழை பெய்தாலோ பக்தர்கள் மலையேற அனுமதி வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சதுரகிரிக்குச் செல்லும் பக் தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். அங்குள்ள நீரோடைகளில் குளிக்கக் கூடாது. இந்த 4 நாட்களிலும் காலை 7 முதல் 11 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக் கப்படுவார்கள்.
இரவு நேரத்தில் கோயில் அமைந்துள்ள பகுதியில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதியில்லை என்று கோயில் நிர்வாகத்தினரும், வனத்துறையினரும் தெரிவித் துள்ளனர்.