மீண்டும் அறிவிக்கும்வரை நிறுவனங்களின் பிரதானிகளுக்கு ,அத்தியாவசிய மற்றும் ஆகக்கூடிய கூழியர்களை கடமைக்கு அழைப்பதற்கு அனுமதி அளித்து அரச பொது நிருவாக அமைச்சு அரச சேவைகளை முன்னெடுப்பதற்கான புதிய சுற்றுநிருபமொன்றை வெளியிட்டுள்ளது.
தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நடவடிக்கை அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கு இடையூறாக இருக்கக்கூடாது எனவும் அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பொது நிருவாகம் ,உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு: