குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவது போன்ற வாக்குறுதிகள் ஏதும் திமுக அரசு நிறைவேற்றவில்லை என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற பிரதமர் மோடியின் 8 ஆண்டு கால ஆட்சியின் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய எல்.முருகன், அடித்தட்டு மக்களுக்காக பல திட்டங்களை பிரதமர் மோடி செயல்படுத்தியதாக கூறினார்.