இந்தியா வளர்ச்சி அடையவில்லை என குற்றம் சாட்டுபவர்கள் திருப்பூர் வந்து பார்த்தாலே போதும் என மத்திய ஜவுளி மற்றும் தொழில் வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
பின்னலாடை நிறுவனங்களை பார்வையிட்ட பிறகு, தொழில்துறையினர் மத்தியில் பேசிய அமைச்சர் பியூஷ் கோயல், 1985 ஆம் ஆண்டில் 15 கோடி ரூபாயாக இருந்த திருப்பூரின் ஏற்றுமதி நடப்பு ஆண்டில் 30 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என்றார்.
திருப்பூரை போன்று நாடு முழுவதும் 75 தொழில் நகர்களை உருவாக்க உறுதியேற்போம் என்றார். இந்தியாவின் வளர்ச்சிக்கு திருப்பூர் ஒரு முன்மாதிரி மாவட்டமாக திகழ்கிறது என்றார்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.