இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அது குறித்து அவர் மனைவி நடாஷா கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியா – அயர்லாந்து அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டப்ளினில் இன்று நடக்கிறது.
சமீபத்தில் நடந்த ஐ.பி.எல். போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு தலைமை தாங்கி கோப்பையை வென்று கொடுத்த ஹர்திக் பாண்ட்யா முதல்முறையாக இந்திய அணியை வழிநடத்துகிறார்.
கேப்டனாக அவரது செயல்பாடு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
கேப்டனாக அறிவிக்கப்பட்ட பின்னர் ஹர்திக் சமூகவலைதளத்தில் வெளியிட்ட பதிவில், இந்திய அணியை வழிநடத்து என்பது ஒரு கெளரவம். இந்த வாய்ப்புக்கு நன்றியுடன் இருப்பேன் என தெரிவித்துள்ளார்.
இந்த பதிவின் கீழ் அவர் மனைவி நடாஷா கமெண்ட் செய்தார். அதில் ’My star’ (என்னுடைய நட்சத்திரம்) என மகிழ்ச்சியுடன் காதலை கலந்து பதிவிட்டுள்ளார்.