இந்திய வம்சாவளி சிறுவனுக்கு லண்டனில் நண்பர்கள் அளித்த இறுதி மரியாதை: நெஞ்சை உலுக்கும் புகைப்படம்


லண்டனில் பரிதாபமாக பலியான இந்திய வம்சாவளி சிறுவனின் இறுதிச் சடங்கில், சவப்பெட்டியை அவரது இளம் நண்பர்கள் குழு சுமந்து சென்ற காட்சிகள் இதயத்தை நொறுக்கும் வகையில் அமைந்துள்ளது.

கடந்த செவ்வாயன்று கார்டிஃபில் உள்ள டாஃப் ஆற்றில் இந்திய வம்சாவளி சிறுவன் 13 வயதான ஆர்யன் கோனியா காணாமல் போன நிலையில் சடலமாக மீட்கப்பட்டான்.

அவசர மருத்துவ சேவைகளால் அவரை உயிர்ப்பிக்க முயன்றும், பலனளிக்கவில்லை என்றும், சம்பவயிடத்திலேயே அவர் மரணமடைந்துள்ளதை உறுதி செய்ததாகவும் தெற்கு வேல்ஸ் பொலிசார் தெரிவித்தனர்.

இந்திய வம்சாவளி சிறுவனுக்கு லண்டனில் நண்பர்கள் அளித்த இறுதி மரியாதை: நெஞ்சை உலுக்கும் புகைப்படம்

இந்த நிலையில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஆர்யனின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் இன்று தோர்ன்ஹில் கல்லறை மற்றும் சுடுகாட்டில் அவரது இறுதிச் சடங்குக்காக திரண்டனர்.

மட்டுமின்றி, ஆர்யனின் நண்பர்கள் சிலர், கறுப்பு மற்றும் வெள்ளை நிற ஆடைகளை அணிந்து, தங்கள் நண்பரின் சவப்பெட்டியை எடுத்துச் சென்ற காட்சி கண்கலங்க வைப்பதாக இருந்தது.

இரங்கல் பதிவில், பலர் உருக்கமான வார்த்தைகளால் சிறுவன் ஆர்யன் தொடர்பில் குறிப்பிட்டுள்ளனர்.
ஒரு சக பள்ளி மாணவர் எழுதிய பதிவில், ஆர்யன், நீங்கள் எப்போதும் நேசிக்கப்படுபவராக இருந்தீர்கள், ஒருபோதும் மறக்க மாட்டீர்கள்.

நீங்கள் பள்ளியில் எனக்கு ஒரு வருடம் மூத்தவராக இருந்தீர்கள். நான் பல ஆண்டுகளாக உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். நிம்மதியாக ஓய்வெடுங்கள், ஆர்யன் என குறிப்பிட்டுள்ளார்.

இந்திய வம்சாவளி சிறுவனுக்கு லண்டனில் நண்பர்கள் அளித்த இறுதி மரியாதை: நெஞ்சை உலுக்கும் புகைப்படம்

உள்ளூர் மக்களால் முன்னெடுக்கப்பட்ட இறுதி அஞ்சலி கூட்டத்தில் ஆர்யனின் தாயார் ஹினா, தந்தை ஜிதேந்திரா மற்றும் சகோதரி நவ்யா ஆகியோர் நேற்று உறவினர்களுடன் சென்றிருந்தனர்.

மட்டுமின்றி, நினைவு அஞ்சலி கூட்டத்தை சாத்தியமாக்கிய கவுன்சிலர் ஹெலன் லாய்ட் ஜோன்ஸுக்கு குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.

மேலும், ஆர்யன் வேல்ஸில் பிறந்தார், அவர் வெல்ஷ் என்பதில் பெருமிதம் கொண்டார், அவருடைய குடும்பத்தில் உறுப்பினராக இருந்ததில் நாங்கள் பெருமைப்படுகிறோம். உங்கள் ஆதரவுக்கு அனைத்திற்கும் நன்றி என குறிப்பிட்டுள்ளனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.