இன்று சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினமாகும்.
மேல் மாகாணத்தில் அபாயகர போதைப்பொருட்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக
அபாயரக ஒசௌத தேசிய கட்டுப்பாட்டு சபை சுட்டிக்காட்டியுள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்துக் காணப்படுவதாக சபையின் கல்வி பிரிவு அதிகாரி மற்றும் ஊடகப் பேச்சாளர் சாமர கருணாரட்ன தெரிவித்தார்.
போதைப்பொருள் பற்றி ஊடகங்களில் வெளியாகும் சில செய்திகள் மக்களை பிழையாக வழிநடத்துகின்றன என்று அவர் மேலும் தெரிவித்தார்.
போதைப்பொருள் பாவனையினால் சமூகத்தில் ஏற்படக் கூடிய பிரச்சினைகள் குறித்த முறைப்பாடுகளை 1984 என்ற அவசர இலக்கத்தின் ஊடாக அறிவிக்க முடியும் என்று திரு.சாமர கருணாரட்ன மேலும் தெரிவித்தார்.