பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அறையில் உளவு பார்ப்பதற்கான கருவியைப் பொருத்த முயன்ற ஊழியர் ஒருவர் சிக்கியுள்ளார்.
பானி காலா என்ற பாதுகாப்பு நிறுவனத்தை சேர்ந்த அவருக்கு பணம் கொடுத்து இந்தப் பணி தரப்பட்டது.
ஆனால் சக ஊழியர் ஒருவர் ரகசிய தகவல் கொடுத்ததால் அந்த சதி முறியடிக்கப்பட்டது. உளவுக் கருவியைப் பொருத்த முயன்ற நபர் கைது செய்யப்பட்டு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்.
தம்மை கொல்ல சதி நடப்பதாக இம்ரான் கான் கூறி வந்த நிலையில் அவரை உளவுப் பார்க்க முயற்சித்தது யார் என்று பாகிஸ்தானில் சர்ச்சை எழுந்துள்ளது.