உலக வங்கியின் வழியாக உக்ரைனுக்கு கூடுதலாக 525 மில்லியன் டாலர்களை பிரித்தானியா ஒதுக்கும் என அந்த நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ரஷ்யா இடையே நடைபெற்று வரும் போர் மோதலில், உக்ரைனுக்கு ஆதரவாக பிரித்தானியா பல்வேறு ஆயுத உதவிகள் மற்றும் பொருளாதார உதவிகளை பிரித்தானிய அரசு வழங்கி வருகிறது.
அதேசமயம்
ரஷ்யாவிற்கு எதிரான பல அடுக்கு பொருளாதார தடைகளையும் பிரித்தானிய அரசு தொடர்ந்து விதித்து வருகிறது.
🇬🇧 Britain will allocate $ 525 million to Ukraine through the World Bank, Prime Minister Boris Johnson
The UK is ready to provide Ukraine with an additional $525 million as guarantees for a World Bank loan at the end of 2022. pic.twitter.com/QT9rB5bVgP
— ТРУХА⚡️English (@TpyxaNews) June 26, 2022
இந்தநிலையில் உக்ரைனுக்கு கூடுதலாக 525 மில்லியன் டாலர்கள் உதவியை பிரித்தானியா ஒதுக்கும் என பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
இதுத் தொடர்பாக பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்த கருத்தில், 2022ம் ஆண்டின் இறுதிக்குள் உக்ரைனுக்கு கூடுதலாக 525 மில்லியன் டாலர்களை பிரித்தானியா உலக வங்கியின் கடனுக்கான உத்திரவாதமாக வழங்க தயாராக இருப்பதாக உறுதியளித்தார்.
இதனைத் தொடர்ந்து g7 மாநாட்டில் பேசிய பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன், உக்ரைனில் ரஷ்யாவின் நடவடிக்கைக்கு எதிராக மேற்கத்திய நாடுகளின் கூட்டமைப்பு தொடர்ந்து இணைந்து செயல்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.
கூடுதல் செய்திகளுக்கு: புடின் வேண்டுகோளை தொடர்ந்து…உக்ரைனில் களமிறங்கும் ரஷ்யாவின் மிருகத்தனமான தளபதி!
ரஷ்யாவின் இந்த அத்துமீறலை எதிர்த்து உக்ரைனுக்கு உறுதுணையாக பிரித்தானியா எப்போதும் விளங்கும் எனத் தெரிவித்தார்.