உக்ரைன் தலைநகர் கீவில் இன்று காலையில் 4 இடங்களில் வெடிகுண்டுகள் வீசப்பட்டுள்ளன. அதில் ஒன்று நகரின் மையப்பகுதிக்கு அருகே அமைந்துள்ள குடியிருப்பு கட்டிடத்தில் விழுந்து வெடித்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதில் அந்த கட்டிடம் தீப்பிடித்து எரிந்ததுடன், கரும்புகையும் சூழ்ந்த காட்சிகள் வெளியாகி உள்ளன. வான்வழி தாக்குதலுக்கான சைரன் எச்சரிக்கை விடுக்கப்பட்டு அரை மணி நேரம் கழித்து குண்டுகள் வீசப்பட்டுள்ளன.
ஷெவ்சென்கிவ்ஸ்கி மாவட்டத்தில் அதிகளவில் வெடிகுண்டுகள் வீசப்பட்டதாக கீவ் மேயர் தெரிவித்துள்ளார். தலைநகரில் 3 வாரங்களுக்கு பிறகு இன்று ரஷ்ய படைகள் தாக்குதலை நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.