எதிர்வரும் 7ஆம் திகதியிலிருந்து 15ஆம் திகதி வரை விவசாயிகளுக்கு உரத்தை விநியோகிப்பதற்கு விவசாய அமைச்சு விசேட வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
இதற்கமைவாக ,விவசாய அமைச்சின் கீழ் செயற்படும் அனைத்து நிறுவனங்களையும் சேர்ந்த ஊழியர்களின் விடுமுறைகள் எதிர்வரும் ஜூலை மாதம் 6ஆம் திகதியில் இருந்து இரத்துச் செய்யப்படுவதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.
இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் 65 ஆயிரம் மெட்ரிக் தொன் யூரியா உரம் எதிர்வரும் ஜூலை மாதம் 6ஆம் திகதி நாட்டுக்கு கிடைக்கவுள்ளது. அந்த உரம் எதிர்வரும்; 7ஆம் திகதியிலிருந்து 15ஆம் திகதி வரை பகிர்ந்தளிக்கப்பட உள்ளது. இதனைக் கருத்திற்கொண்டே விவசாய அமைச்சின் கீழ் செயற்படும் நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்களின் விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.