எரிபொருள் தட்டுபாடு: முச்சக்கரவண்டிகளுக்கு வழங்கப்பட்டுள்ள விசேட அனுமதிபத்திரம்


மட்டக்களப்பில் அனுமதிபத்திர முறைமையில் வாகனங்களுக்கு எரிபொருள் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் எரிபொருள்களுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவி வருகின்ற சூழ்நிலையில், கல்முனை மாநகர பிரதேசங்களில் அவற்றை விநியோகிக்கும் நடவடிக்கைகளை முறையாக ஒழுங்குபடுத்தி, சுமுகமாக நடைமுறைப்படுத்துவது தொடர்பிலான உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்று கல்முனை மாநகர சபையில் நேற்று (25) மாலை நடைபெற்றுள்ளது.

மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் தலைமையில் இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எரிபொருள் தட்டுபாடு: முச்சக்கரவண்டிகளுக்கு வழங்கப்பட்டுள்ள விசேட அனுமதிபத்திரம்

இந்த கலந்துரையாடலில் பெட்ரோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விநியோகத்தின்போது ஏற்படுகின்ற குளறுபடிகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாகவும் அவற்றை நிவர்த்தி செய்து, விநியோக நடவடிக்கைகளை சீராக முன்னெடுப்பதற்குரிய பொறிமுறைகளை வகுப்பதற்கான ஆலோசனைகளும் பரிமாறிக்கொள்ளப்பட்டுள்ளன.

தீர்மானங்கள்

எரிபொருள்கள் விநியோகத்தின்போது உரிய மக்களுக்கு அவை கிடைப்பதை உறுதி செய்தல், பதுக்கல் மற்றும் முறைகேடான செயற்பாடுகளை முறியடித்தல், குழப்பங்கள் ஏற்படுவதை தவிர்த்தல் போன்றவற்றை மையமாகக் கொண்டு ஆலோசனைகள் பரிசீலிக்கப்பட்டுள்ளன.

இதன்போது அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட முதல்வர் ஏ.எம்.றகீப் அவர்கள், அரசாங்க அதிபரின் ஆலோசனைகளையும் அறிவுறுத்தல்களையும் பெற்றுக் கொண்டதுடன் முதல்வர் தலைமையிலான குழுவினர் அவரை சந்தித்து கலந்துரையாடுவதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

எரிபொருள் தட்டுபாடு: முச்சக்கரவண்டிகளுக்கு வழங்கப்பட்டுள்ள விசேட அனுமதிபத்திரம்

எரிபொருள் விநியோக பிரச்சினைகளுக்கு அவசரத் தீர்வு காணுமுகமாக அனைத்து தரப்பினரதும் இணக்கப்பாட்டுடன் இங்கு சில முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

கல்முனை மாநகராட்சி எல்லையினுள் சுமார் 45ஆயிரம் குடும்பங்கள் வாழ்கின்ற நிலையில், தேவையான ஒவ்வொரு குடும்பமும் மாதமொரு முறையாவது மண்ணெண்ணையை பெற்றுக்கொள்ளும் பொருட்டு விசேட குடும்ப அட்டையை மாநகரசபை மற்றும் பிரதேச செயலகங்கள் இணைந்து வழங்குதல்.

கல்முனை மாநகராட்சி எல்லையினுள் பாவனையிலுள்ள வாகனங்கள் அனைத்துக்கும் எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக ஒவ்வொரு வாகனத்திற்கும் எரிபொருள் அனுமதிப்பத்திரம் வழங்க நடவடிக்கை எடுத்தல்.

முதற்கட்டமாக அனைத்து முச்சக்கர வண்டிகளும் கல்முனை மாநகர சபையில் பதிவு செய்யப்பட வேண்டும். தரப்படும் நாட்களில் வருகைதந்து மோட்டார் திணைக்கள பதிவு புத்தகத்தின் பிரதியை சமர்ப்பித்து, பதிவு செய்து கொள்ள வேண்டும். அதனைத் தொடர்ந்து மோட்டார் சைக்கிள்களும் ஏனைய வாகனங்களும் பதிவு செய்யப்படும்.

கடற்றொழில், விவசாயம், கைத்தொழில் துறைகளுக்கும் உணவு பண்டங்கள் உற்பத்தியாளர்களுக்கும் தேவையானளவு மண்ணெண்ணெய், டீசல் போன்றவற்றை அந்தந்த திணைக்களங்களின் சிபாரசுகளுக்கேற்ப விநியோகிக்க நடவடிக்கை எடுத்தல்.

எரிபொருள் தட்டுபாடு: முச்சக்கரவண்டிகளுக்கு வழங்கப்பட்டுள்ள விசேட அனுமதிபத்திரம்

சுகாதாரத்துறையினர், அதிபர், ஆசிரியர்கள் மற்றும் அரச ஊழியர்களுக்கு பெட்ரோல் வழங்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை சரியாக நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விநியோக நடவடிக்கைகளில் நிச்சயமற்றதன்மை காணப்படுவதால் தமக்குக் கிடைக்கின்ற எரிபொருள்களை கொண்டே மக்களுக்கு அவற்றை விநியோகிக்க முடியுமாக இருக்கும் என எரிபொருள் நிரப்பு நிலையங்கள் சார்பில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் இங்கு சுட்டிக்காட்டியுள்ளனர்.

எரிபொருள் தட்டுபாடு: முச்சக்கரவண்டிகளுக்கு வழங்கப்பட்டுள்ள விசேட அனுமதிபத்திரம்

இதன்போது பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கிழக்கு பிராந்திய முகாமையாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட முதல்வர், விநியோக நிலவரங்கள் தொடர்பில் கேட்டறிந்துள்ளார்.

இதன் அடிப்படையில் எதிர்வரும் காலங்களில் கல்முனை பிராந்தியத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான எரிபொருள்களை அதிகரித்து பெற்றுத்தருவதற்கான உயர்மட்ட முயற்சிகள் தன்னால் மேற்கொள்ளப்படும் என முதல்வர் ஏ.எம்.றகீப் உறுதியளித்துள்ளார்.

எரிபொருள் தட்டுபாடு: முச்சக்கரவண்டிகளுக்கு வழங்கப்பட்டுள்ள விசேட அனுமதிபத்திரம்

பங்களிப்பு

இந்த கலந்துரையாடலில் பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர், ஆணையாளர் எம்.சி.அன்சார், கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி, சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆஷிக், மாநகர சபை உறுப்பினர்களான சி.எம்.முபீத், ஹென்றி மகேந்திரன், சட்டத்தரணி ரொஷான் அக்தர், எம்.எஸ்.எம்.சத்தார், எம்.எஸ்.எம்.றபீக், எம்.எம்.பைரூஸ், கல்முனை பொலிஸ் நிலைய பிரதம பொலிஸ் பரிசோதகர் அப்துல் வாஹித் உட்பட கல்முனை மாநகராட்சி எல்லையினுள் இயங்கி வருகின்ற 10 எரிபொருள் நிரப்பு நிலையங்களினதும் பிரதிநிதிகளும் பங்கேற்றுள்ளனர்.

முச்சக்கரவண்டிகளை பதிவு செய்தல்

எரிபொருள் விநியோகம் தொடர்பாக மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் தலைமையில் நேற்று(25) கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

இதன் போது எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி முச்சக்கரவண்டிகளுக்கு அனுமதிப்பத்திரம் முறைமையில் பெட்ரோல் வழங்குவதற்கான நேர அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

எரிபொருள் தட்டுபாடு: முச்சக்கரவண்டிகளுக்கு வழங்கப்பட்டுள்ள விசேட அனுமதிபத்திரம்

நேர அறிவிப்பு

பயணிகள் சேவையில் ஈடுபடுகின்ற முச்சக்கர வண்டிகளினதும், தனிப்பட்ட பாவனையில் உள்ள முச்சக்கர வண்டிகளினதும் உரிமையாளர்கள் அல்லது பாவனையாளர்கள் மோட்டார் திணைக்கள பதிவுப் புத்தகத்தின் பிரதியுடன்

கல்முனை பொதுநூலக வளாகத்தில் அமைந்துள்ள மாநகர சபை அலுவலகத்திற்கு வருகைதந்து, அதனைப் பதிவு செய்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை திங்கள் (27) மற்றும் நாளை மறுதினம் செவ்வாய் (28) இரு தினங்களும் சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள முச்சக்கர வண்டிகளும் புதன்கிழமை (29) மற்றும் வியாழக்கிழமை (30) இரு தினங்களும் கல்முனை பிரதேசத்திலுள்ள முச்சக்கர வண்டிகளும் பதிவு செய்யப்படவுள்ளன.

எரிபொருள் தட்டுபாடு: முச்சக்கரவண்டிகளுக்கு வழங்கப்பட்டுள்ள விசேட அனுமதிபத்திரம்

எதிர்வரும் வெள்ளிக்கிழமை (01.07.2022) மற்றும் சனிக்கிழமை (02) ஆகிய இரு தினங்களும் பாண்டிருப்பு, மணற்சேனை, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு ஆகிய பிரதேசங்களிலுள்ள முச்சக்கர வண்டிகள் பதிவு இடம்பெறும்.

அத்துடன் ஞாயிறு (03.07.2002) மற்றும் திங்கள் (04) ஆகிய இரு தினங்களும் மருதமுனை, பெரிய நீலாவணை ஆகிய பிரதேசங்களிலுள்ள முச்சக்கர வண்டிகள் பதிவு செய்யப்படும் என கல்முனை மாநகர சபை அறிவித்துள்ளது.

வேண்டுகோள்

அறிவிக்கப்பட்டுள்ள தினங்களில் மாத்திரம் வருகைதந்து, பதிவு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு சம்மந்தப்பட்டவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

எரிபொருள் தட்டுபாடு: முச்சக்கரவண்டிகளுக்கு வழங்கப்பட்டுள்ள விசேட அனுமதிபத்திரம்



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.