ஏர்வாடி தர்காவில் நடைபெற்ற சந்தனக்கூடு திருவிழாவின் போது, பணியில் இருந்த காவலரை மதுபோதையில் இருந்த 4 இளைஞர்கள் தாக்கிய காட்சி வெளியாகியுள்ளன.
நால்வர் கும்பலில் ஒருவன் கைது செய்யப்பட்டிருக்கிறான். கடந்த 24-ம் தேதி நடைபெற்ற சந்தனக்கூடு ஊர்வலத்தின் போது இளைஞர்கள் சிலரை ஒதுங்கிச் செல்ல காவலர் அறிவுறுத்தியதால் ஏற்பட்ட தகராறில், காவலரை 4 இளைஞர்கள் சரமாரியாக தாக்கினர்.
புகாரின் பேரில் வழக்கு பதிந்த போலீசார் ஒருவரை கைது செய்த நிலையில், 3 பேரை தேடி வருகின்றனர்.