உலகின் மிகப் பெரிய ஸ்வீடிஷ் ஃபர்னிச்சர் குழுமம் ஐகியா, இந்தியாவில் ஏற்கனவே மும்பை, நவி மும்பை, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் இயங்கி வந்த நிலையில் பெங்களூருவில் ஜூன் 22-ம் தேதி திறக்கப்பட்டது.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரில் புதிய IKEA ஸ்டோர் திறக்க திட்டமிட்ட நிலையில் இன்று பெங்களூருவில் நகசந்திராவில் 4 லட்சத்து 60 ஆயிரம் சதுர அடியில் பிரமாண்டமாக சில்லரை விற்பனை கடையை திறந்தது.
வார நாட்களிலேயே இந்த கடைக்கு அதிக மக்கள் குவிந்து வந்த நிலையில், ஆரம்பித்த முதல் வார இறுதி நாளான சனிக்கிழமை மிகப் பெரிய கூட்டம் சேர்ந்து திக்குமுக்காட வைத்துள்ளனர்.
டன் கணக்கில் மாட்டு சாணம் ஏற்றுமதி.. வாங்குவது யார் தெரியுமா..?
ஐகியா இந்தியா
அது குறித்து தங்களது டிவிட்டர் பதிவு மூலம் தெரிவித்த ஐகியா இந்தியா, “தங்களுக்கு பெங்களூருவில் மிகப் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. நாகசந்திராவில் இப்போது 3 மணி நேரம் வரை வாடிக்கையாளர்கள் காத்திருக்கின்றனர். எனவே ஆன்லைன் ஷாப்பிங்கிகு திட்டமிடுங்கள் என தெரிவித்துள்ளது.”
சனிக்கிழமை
சனிக்கிழமையே இந்த அளவுக்கு சேர்ந்ததால், ஞாயிற்றுக்கிழமையான இன்றும் ஐகியாவை திக்குமுக்காட வைத்துள்ளனர் வாடிக்கையாளர்கள்.
திருப்பி அனுப்பப்பட்ட வாடிக்கையாளர்கள்
வாடிக்கையாளர்கள் பலர் 3 மணி நேரம் காத்திருந்தது மட்டுமல்லாமல் ஷாப்பிங் செய்ய முடியாமல் வீட்டிற்கும் திருப்பியும் அனுப்பப்பட்டுள்ளனர். மாலை 6 மணிக்கு மே வாடிக்கையாளர்களை உள்ளே அனுமதிக்கப்படாமலும் ஐகியா நிர்வாக திருப்பி அனுப்பியுள்ளது.
வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை
சனிக்கிழமை ஒரு நாளில் மட்டும் ஐகியா பெங்களூரு கிளைக்கு 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் வந்ததாக கூறப்படுகிறது.
மெட்ரோ ரயில் நிலையம்
பொதுவாக நகசந்திரா மெட்ர்ரோ ரயில் நிலையத்துக்குச் சனிக்கிழமைகளில் 13 ஆயிரம் பயணிகள் வருவார்கள். ஆனால் சனிக்கிழமை 30,067 பயணிகள் வந்துள்ளனர். எனவே மெட்ரோ ரயில் நிலையத்திலும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பயணம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
IKEA Bengaluru Huge Response Made Store To Shut AT Evening 6 PM
IKEA Bengaluru Huge Response Made Store To Shut AT Evening 6 PM | ஐகியா பெங்களூரு கிளையை மாலை 6 மணிக்கே மூட வைத்த வாடிக்கையாளர்கள்.. நடந்தது என்ன?