தங்கம் விலையானது கடந்த சில நாட்களாக முதலீட்டாளார்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக சரிவில் காணப்படுகின்றது.
இதற்கிடையில் ஸ்பாட் கோல்டின் சப்போர்ட் லெவல் அவுன்ஸூக்கு 1810 டாலராகவும், அடுத்தாற்போல் 1770 டாலர்களாகவும் நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
தொடர்ச்சியான முந்தைய பல வாரங்களாக தங்கம் விலையானது ஏற்றம் கண்டு வந்த நிலையில், கடந்த வார உச்சத்தில் 1000 ரூபாய் சரிவில் காணப்படுகின்றது.
வாவ்.. தங்கம் இவ்வளவு குறைந்திருக்கா.. சாமானியர்களுக்கு சரியான வாய்ப்பு தான்..!
ஸ்டாப் கோல்டு விலை
ஸ்பாட் கோல்டின் விலையானது 1826 டாலர் என்ற லெவலில் காணப்படுகின்றது. பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் அடிப்படை உலோகங்கள் விலையானது சரிவினைக் கண்டுள்ளது. இதே வெள்ளி விலையானது கடந்த வாரத்தில் 1.95% சரிவினைக் கண்டு, 59,749 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதே சர்வதேச சந்தையில் 2.57% சரிவினைக் கண்டு, 21.11 டாலர்களாக காணப்படுகின்றது.
தங்கத்தின் முக்கிய லெவல்கள்
நிபுணர்களின் கணிப்பின் படி, ஸ்பாட் கோல்டின் விலையானது அவுன்ஸூக்கு 1810 டாலர்களாகவும், அடுத்த லெவலக 1770 டாலர்களாகவும் கணித்துள்ளனர். இதே ஸ்பாட் வெள்ளியின் முக்கிய உடனடி சப்போர்ட் லெவல் ஆக 20.50 டாலராகவும், 20 டாலராகவும் மதிப்பிட்டுள்ளனர். இதே இந்திய சந்தையில் 10 கிராமுக்கு 49,200 ரூபாயாகவும், வெள்ளியின் விலை இந்திய சந்தையில் 58,500 ரூபாயாகவும், 56000 ரூபாயாகவும் கணித்துள்ளனர்.
ரிலிகேர் கருத்து
ரிலீகேர் புரோக்கிங்க் லிமிடெட் நிறுவனம் தங்கம் விலையானது கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து ரேஞ்ச் பவுண்டாக வர்த்தகமாகி வந்தது. இதற்கிடையில் டாலரின் மதிப்பானது வலுவாக இருந்து வந்த நிலையில், தங்கம் விலையானது நடப்பு வாரத்தில் மீண்டும் சரிவினைக் காணத் தொடங்கியது.
டாலரின் மதிப்பு உச்சம்
டாலரின் மதிப்பானது 2 தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு உச்சத்தில் காணப்படுகின்றது. இதற்கிடையில் பணவீக்கத்திற்கு எதிராக விரைவில் அமெரிக்காவின் மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கொண்டு டாலரின் மதிப்பினை ஊக்குவிக்கலாம். இது மேற்கொண்டு தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
பொருளாதார அச்சம்
எனினும் அதிகரித்து வரும் உக்ரைன் ரஷ்யா பிரச்சனைக்கு மத்தியில் சர்வதேச பொருளாதாரம் என்னவாகுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்தில் அதிகளவிலான சரிவினை தடுக்கலாம். இது மேற்கொண்டு தங்கம் விலையானது சரியாமல் தடுக்கலாம்.
ரூபாய் சரிவு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றது. இது பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலைக்கு சாதகமாக அமையலாம். வெள்ளி விலையும் நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
விலையை ஆதரிக்கலாம்
அமெரிக்க மத்திய வங்கியின் தலைவர் அதிகரித்து வரும் வட்டி விகிதமானது பொருளாதார மந்த நிலைக்கு வழிவகுக்கலாம் என்றும் எச்சரித்திருந்தனர். இதன் காரணமாக பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் ஜிடிபி முதல் காலாண்டில் சரிவினைக் கண்டது. இரண்டாம் பாதியில் சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கம் விலையில் தாக்கம்
ஜப்பான், பிரிட்டன், யூரோப்பிய பகுதி மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகள் என பல பகுதிகளில் தொழில் சாலைகள் முடங்கியிருந்தன. ஆனால் இனி வரும் வாரங்களில் அதில் மாற்றம் இருக்கலாம். வளர்ச்சி அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
Gold prices crashed over Rs.1000 in a week, is it a right to buy?
Gold prices have been on the rise for the past several weeks, with the rupee depreciating by Rs 1,000 to last week’s high.