கடந்த ஆண்டு நடந்த கொலைக்கு பழிக்குப் பழி வாங்க சென்னை திருவல்லிக்கேணியில் அறை எடுத்து தங்கி திட்டம் போட்டதாக 9 சிறுவர்கள் உள்பட 14 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவல்லிக்கேணி தமிழ்நாடு விடுதியில் சந்தேகத்திற்கு இடமாக சிலர் அறை எடுத்து தங்கி உள்ளதாக மேலாளர் அளித்த தகவலில் விசாரணை நடத்திய போலீசார், பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 14 பேரை மடக்கிப் பிடித்தனர்.
விசாரணையில் கடந்த ஆண்டு ஐஸ் ஹவுஸ் பகுதியில் விக்கி என்பவர் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்கு பழி வாங்க திட்டமிட்டு விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தது தெரியவந்தது. கஞ்சா, வீச்சறுவாள், உள்ளிட்ட கூரிய ஆயுதங்களை பறிமுதல் செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.